Winston Churchill: ’இந்திய சுதந்திரத்தை என்றும் எதிர்த்தவர்!’ வின்ஸ்டன் சர்ச்சில் நினைவு தினம் இன்று!
”சர்ச்சிலின் இந்தியாவுடனான உறவில் ஒரு இருண்ட அத்தியாயம் இரண்டாம் உலகப் போரின் போது வங்காளப் பஞ்சத்தை அவர் கையாண்டது. அவரது கொள்கைகள் நெருக்கடியை அதிகப்படுத்தி, பரவலான துன்பங்களுக்கும் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்தது என்ற விமர்சனம் வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது”
வின்ஸ்டன் லியோனார்ட் ஸ்பென்சர் சர்ச்சில் நவம்பர் 30, 1874ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க பிரிட்டிஷ் பிரபுக் குடும்பத்தில் பிறந்தார். அவரது கல்விக்கு பிறகு, தமது தந்தையின் விருப்பப்படி ராணுவ கல்லூரியில் சேர்ந்து பின்னர் ராணுவத்திலும் இணைந்தார். பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இருந்த பல நாடுகளில் ராணுவப்பணியை சர்ச்சில் செய்தார்.
அக்டோபர் 1896ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள மும்பைக்கு சர்ச்சில் வந்தார். பின்னர் பெங்களூரில் தங்கியிருந்த அவர், 19 மாதங்கள் இந்தியாவில் இருந்தார். மேலும் இந்தியாவின் வரலாறு குறித்த நூல்களையும் ஆழமாக வாசிக்கத் தொடங்கினார்.
சர்ச்சிலின் அரசியல் வாழ்க்கை 1900 ஆம் ஆண்டில் ஓல்ட்ஹாம் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது தொடங்கியது. அடுத்த சில பத்தாண்டுகளில் பிரிட்டனில் நிலவிய கொந்தளிப்பான அரசியல் நிலப்பரப்பை அவர் வழிநடத்தினார். பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை சர்ச்சில் வகித்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட வின்சஸ்டன் சர்ச்சில் 1965ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று இறந்தார்.
இந்தியாவைப் பற்றிய சர்ச்சிலின் சர்ச்சௌ கருத்துகள்:-
சர்ச்சில் பிரிட்டிஷ் பேரரசு மற்றும் அதன் ஏகாதிபத்திய கொள்கைகளில் மிகத் தீவிரமானவராக இருந்தார். இந்தியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தேவை என்பதை அவர் ஒப்புக்கொண்ட அவர் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் தருவதை ஏற்காதவராக இருந்தார். இந்தியாவைப் பற்றிய சர்ச்சிலின் அறிக்கைகள் அடிக்கடி சர்ச்சைக்குரியவை. அவர் மகாத்மா காந்தி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸை கடுமையாக விமர்சித்தார்.
சர்ச்சிலின் இந்தியாவுடனான உறவில் ஒரு இருண்ட அத்தியாயம் இரண்டாம் உலகப் போரின் போது வங்காளப் பஞ்சத்தை அவர் கையாண்டது. அவரது கொள்கைகள் நெருக்கடியை அதிகப்படுத்தி, பரவலான துன்பங்களுக்கும் உயிர் இழப்புகளுக்கும் வழிவகுத்தது என்ற விமர்சனம் வரலாற்று ஆசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது.
டாபிக்ஸ்