ஆர்சிபி வெற்றி ஊர்வலம்: அனுமதி மறுப்புக்குப் பிறகும் நடந்த கொந்தளிப்பு! உயிரிழப்புக்கு யார் பொறுப்பு?
பெங்களூரு போலீசார் அனுமதி மறுத்தும், ஆர்சிபி வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் யாருக்கு பொறுப்பு என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது.

RCB fans gathered in large numbers outside Vidhana Soudha in Bengaluru on Wednesday to catch a glimpse of their Indian Premier League (IPL) 2025 champion team. (ANI)
எம். சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் சாம்பியன்ஷிப் வெற்றியை கொண்டாட நடத்தப்பட்ட ஊர்வலத்தின் ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.
போலீசார் அனுமதி மறுப்பு
விதான் சௌதாவில் தொடங்கி எம். சின்னசாமி மைதானத்தில் முடிவடையும் 2 கி.மீட்டருக்கும் குறைவான தூரம் கொண்ட இந்த ஊர்வலம், சிறு இடத்தில் பெருமளவிலான கூட்டத்தை எதிர் கொண்டது. திறந்த மேல்புறம் கொண்ட பேருந்தில் ஊர்வலம் நடத்த போலீசார் அனுமதி மறுத்ததால் நிலைமை மேலும் சிக்கலானதாக மாறியது என தகவல் வெளியாகி வருகிறது.