Argentina Next President: அர்ஜென்டினாவின் அடுத்த அதிபர்.. யார் இந்த ஜேவியர் மிலே?
சோசலிசத்தின் தீவிர எதிர்ப்பாளர், பெண்ணிய கொள்கைகள் மற்றும் கருக்கலைப்புகளை விமர்சிப்பவர் ஜேவியர் மிலே.
அர்ஜென்டினாவின் அரசியலில் தீவிர வலதுசாரியும், பொருளாதார வல்லுநருமான ஜேவியர் மிலே, நாட்டின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ளார். நவம்பர் 19 அன்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், இவர் 56 சதவீத வாக்குகளைப் பெற்றார் .
லத்தீன் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில் சோசலிசத்தால் வரலாற்று ரீதியாக தாக்கம் செலுத்தப்பட்டுவந்தது. அத்தகைய அரசியல் நிலப்பரப்பை மிலேயின் நடவடிக்கை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
53 வயதான ஜேவியர், நிதிச் செலவினங்களைக் கடுமையாக்குவதாக உறுதியளித்திருந்தார். உள்ளூர் நாணயத்தை ரத்து செய்வதாகவும், மத்திய வங்கியை மூடுவதாகவும் உறுதியளித்திருக்கிறார்.
ஜேவியர் மிலி யார் என்பதை இங்கே பார்க்கலாம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மிலே தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் ஒரு முக்கிய நிபுணராக இருந்தார், அவர் நிதி ஒழுக்கம் இல்லாததை விமர்சித்தார். வெகுஜனங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தத் தவறியதற்காக அரசியல்வாதிகளைக் கண்டித்தார்.
ஆனால் 2021 ஆம் ஆண்டில், அவர் தனது சொந்த அரசியல் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சட்டமியற்றும் உறுப்பினராக வெற்றி பெற்றார்.
இந்த ஆண்டு ஆகஸ்டில், தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளராக அரசியல் நோக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அவர் 30.5 சதவீத வாக்குகளைப் பெற்றார், இது பிரதான பழமைவாத கூட்டணியால் பெற்ற 28 சதவீதத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும், ஆளும் பெரோனிஸ்ட் கூட்டணி் 27 சதவீதத்தைப் பெற்றது.
அதிபர் தேர்தல் போட்டிக்கு முன்னதாக, ஜேவியர் தனது "முதலாளித்துவ" கருத்துகளால் உலகம் முழுவதும் செய்தித்தாள்களில் முக்கிய இடம் பிடித்தார்.
பெண்ணியம், கருக்கலைப்பு ஆகியவற்றை எதிர்க்கிறது
அவரது பொருளாதாரக் கொள்கைகளைத் தவிர, சமூகப் பிரச்சினைகளிலும் ஜேவியர் மிலே தீவிர வலதுசாரி நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பெண்ணியக் கொள்கைகளை எதிர்ப்பதாகவும், கருக்கலைப்புக்கு எதிரான அவரது கடுமையான நிலைப்பாட்டிற்காகவும் அறியப்படுகிறார்.
சமீபத்திய ஆண்டுகளில் அர்ஜென்டினாவில் கருக்கலைப்பு சட்டப்பூர்வமாக்கப்பட்ட நிலையில், இவர் தனது பிரச்சாரத்தின் போது, கருக்கலைப்புக்கான உரிமையை ரத்து செய்ய முடியுமா என்பதை தீர்மானிக்க வாக்கெடுப்பு நடத்த முன்மொழிந்தார்.
பெரும்பாலான உலகத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட - காலநிலை மாற்றத்திற்கு மனித செயல்களே காரணம் என்ற கண்ணோட்டத்தையும் இவர் எதிர்க்கிறார்.
இவர், டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.
கால்பந்து வீரர், ஆரம்பகால வாழ்க்கையில் பாடகர்
அவரது இளமை பருவத்தில், இவர் ஒரு கால்பந்து வீரராக இருந்தார். அவர் சாகரிட்டா கால்பந்து கிளப்பின் இளைஞர் பிரிவில் கோல்கீப்பராக இருந்தார்.
கால்பந்தாட்டத்திற்காக நேரத்தை ஒதுக்குவதைத் தவிர, அவர் ஒரு இசை ஆர்வலராகவும் இருந்தார். இசைக் குழுக்களில் இணைந்து பாடவும் செய்துள்ளார்.
ஒரு பொருளாதார நிபுணராக, இவர் பெரும்பாலான விமான நிலையங்களை நிர்வகிக்கும் நாட்டின் முன்னணி வணிகக் குழுக்களில் ஒன்றான Corporación அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றினார். அவர் 2021 இல் தேர்தல் அரசியலில் நுழையும் வரை கார்போரேஷனின் தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றினார்.
டாபிக்ஸ்