Gyanesh Kumar: இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைமைத் தேர்தல் ஆணையர்.. யார் இந்த ஞானேஷ் குமார்?
Gyanesh Kumar: புதிய தலைமை தேர்தல் ஆணையராக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான குழு ஞானேஷ் குமாரின் பெயரை முன்மொழிந்தது.

Who is Gyanesh Kumar: தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைமை தேர்தல் ஆணையர்.. யார் இந்த ஞானேஷ் குமார்? (ECI/X)
Gyanesh Kumar: புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக ஞானேஷ் குமாரை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 65 வயதாகிய ராஜீவ் குமார் ஓய்வு பெறும் நிலையில், புதிய தலைவராக ஞானேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான புதிய சட்டத்தின் கீழ் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தலைமை தேர்தல் ஆணையர் ஆனார் ஞானேஷ் குமார். 1989 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான டாக்டர் விவேக் ஜோஷி, தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான தேர்வுக் குழு கூட்டத்தில் ஞானேஷ் குமாரின் பெயர் இறுதி செய்யப்பட்டது.
