தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Whats Wrong With India Story Behind The Viral Trend Social Media Platform X Was Flooded

What's wrong with India: டிரெண்டிங்கில் 'வாட்ஸ் ராங் வித் இந்தியா'-இந்திய யூசர்ஸ் பதிலடி.. காரணம் என்னன்னு பாருங்க

Manigandan K T HT Tamil
Mar 13, 2024 09:57 AM IST

Whats wrong with India: இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்திற்கு வழிவகுத்தது, பல அக்கவுண்ட்கள் இந்தியாவில் அவர்களின் விரும்பத்தகாத பயண அனுபவங்களை எடுத்துக் காட்டுகின்றன. சில அக்கவுண்ட்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுக்கும் வாய்ப்புகள்.

டிரெண்டிங்கில் இருக்கும் வாட்ஸ் ராங் வித் இந்தியா போஸ்ட்
டிரெண்டிங்கில் இருக்கும் வாட்ஸ் ராங் வித் இந்தியா போஸ்ட்

ட்ரெண்டிங் செய்திகள்

செவ்வாயன்று, சமூக ஊடக தளமான எக்ஸ், 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' என்ற சொற்றொடருடன் பல்வேறு போஸ்ட்களால் நிரம்பி வழிந்தது. மாலைக்குள், இது 2.5 லட்சத்திற்கும் அதிகமான போஸ்ட்களுடன் இது ஒரு டிரெண்ட் ஆனது, மேலும் அரசாங்கத்தின் குடிமக்கள் ஈடுபாடு போர்ட்டலான MyGovIndia கூட இதில் பங்கேற்றது.

ஆனால் 'இந்தியாவுக்கு என்ன அச்சு' ட்ரெண்ட் ஆனது ஏன், அது ஏன் வைரலாகி வருகிறது?

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சீற்றத்திற்கு வழிவகுத்தது, பல அக்கவுண்ட்கள் இந்தியாவில் அவர்களின் விரும்பத்தகாத பயண அனுபவங்களை எடுத்துக் காட்டுகின்றன.

இருப்பினும், சில அக்கவுண்ட்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்தியாவின் நன்மதிப்பைக் கெடுக்கும், இது போன்ற சம்பவங்கள் நாட்டில் தினசரி விவகாரம் என்று குற்றம் சாட்டின.

"உலகின் பலாத்கார தலைநகரம்" என்று இந்தியாவை கேலி செய்து ஒரு வாரத்தில் இதுபோன்ற பல பதிவுகள் பகிரப்பட்டன. அதுமட்டுமல்லாமல், இந்த பதிவுகள் பொது சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஒரே மாதிரியான கருத்துக்களை ஊக்குவிக்கின்றன.

இதில் பல பதிவுகள் 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' என்ற வாசகத்துடன் பகிரப்பட்டது.

இந்தியாவில் உள்ள சில சமூக ஊடக பயனர்கள் இந்த பதிவுகள் அசாதாரணமான டிரெண்டிங்கைப் பெறுவதாகக் கூறி, அதற்கு X இன் அல்காரிதம் மீது குற்றம் சாட்டினர்.

செவ்வாயன்று, இந்தியாவில் உள்ள பல X பயனர்கள் அதே சொற்றொடரைப் பயன்படுத்தி போஸ்ட்களைப் பகிர்ந்துள்ளனர், ஆனால் ஒரு அதில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.

 

மற்ற நாடுகளில் நடந்த இதுபோன்ற சம்பவங்களின் படங்கள் மற்றும் வீடியோக்களை யூசர்கள் 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' என்ற தலைப்பில் பகிர்ந்துள்ளனர்.

X இன் அல்காரிதம் 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' என்ற சொற்றொடரைக் கொண்ட மற்றும் இந்தியாவுக்கு எதிரான உள்ளடக்கத்தைப் பகிரும் இத்தகைய பதிவுகளை ஊக்குவிப்பதாக நிரூபிப்பதே நோக்கமாக இருந்தது.

300க்கும் குறைவான பின்தொடர்பவர்களைக் கொண்ட பயனர்களால் பகிரப்பட்ட இந்தப் பதிவுகளில் சில, ஒரு லட்சத்திற்கும் அதிகமான இம்ப்ரெஷன்களைப் பெற்றுள்ளன. கருத்துகள் மற்றும் விருப்பங்களின் விகிதமும் திகைக்க வைக்கிறது.

இந்திய X பயனர்கள் மேற்கத்திய நாடுகளில் மக்கள் வெளியிடங்களில் குளிப்பது போன்ற படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளனர், அதை 'இந்தியாவுக்கு என்ன ஆச்சு' என்ற வாசகத்துடன் கிண்டலாக பதிவு வெளியிட்டுள்ளனர்.

‘இந்தியாவுக்கு என்ன ஆச்சு’ எவ்வளவு பதிவுகளை பெற்றது என்று தெரியவில்லை என்றாலும், இந்திய X சமூகம் நிச்சயமாக இந்த சொற்றொடரை கடத்தி தங்களுக்கு சாதகமாக மாற்றியது என கூறலாம்.

இந்தியாவை அவமதிக்க வேண்டும் என்ற சில வெளிநாடுகளின் சதி தான் இது எனவும் சிலர் குற்றம்சாட்டி வேதனையை வெளிப்படுத்துகின்றனர். சமூக வலைத்தளங்களில் தினம் ஒரு மாதிரியாக சென்று கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் இது டிரெண்டிங்கில் இருந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்