WhatsApp Scam: ‘இதெல்லாம் வந்தா டவுன்லோடு பண்ண வேணாம்’.. வாட்ஸ்அப் மோசடி என்றால் என்ன.. தற்காத்துக் கொள்வது எப்படி?
WhatsApp Scam: whatsapp-இல் நிறைய ஸ்கேம் வருகிறது. ஏற்கனவே சிலருக்கு தெரிந்து இருக்கக் கூடும். ஒரு அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து ஒரு மெசேஜ் ஒரு லிங்க் நமக்கு வரும்போது அதை கிளிக் செய்யக் கூடாது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, சமூக ஊடக தளமான வாட்ஸ்அப், அதைத் தொடர்ந்து டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஆன்லைன் மோசடி செய்பவர்களுக்கு பிடித்த வேட்டைக் களங்களில் முக்கியமானவையாக இருக்கின்றன. இவற்றில் வாட்ஸ்அப் அனைத்துத் தரப்பினராலும் அனைத்து வயதினராலும் பயன்படுத்தப்பட்டுவரும் தகவல் பரிமாற்ற செயலி (App) ஆகும்.
2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், வாட்ஸ்அப் வாயிலாக சைபர் மோசடிகளை எதிர்கொண்டதாக மொத்தம் 43,797 புகார்கள் பெறப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து டெலிகிராம் வாயிலாக மோசடியை எதிர்கொண்டதாக 22,680 புகார்களும், இன்ஸ்டாகிராம் வாயிலாக மோசடிை எதிர்கொண்டதாக 19,800 புகார்களும் பெறப்பட்டுள்ளன.
வாட்ஸ்அப் மோசடி என்றால் என்ன?
whatsappல நிறைய ஸ்கேம் வருகிறது. ஏற்கனவே சிலருக்கு தெரிந்து இருக்கக் கூடும். ஒரு அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து ஒரு மெசேஜ் ஒரு லிங்க் நமக்கு வரும்போது அதை கிளிக் செய்யக் கூடாது. "ஒரு ஜாப் ஆஃபர் இருக்கிறது. இது ஒரு சிம்பிள் டாஸ்க் தான். இதை மட்டும் நீங்க கிளிக் பண்ணீங்கன்னா மாசம் இவ்வளவு சம்பாதிக்கலாம்" என்றெல்லாம் நமக்கு மெசேஜ் வரும்.
எப்படி மோசடியில் இருந்து தவிர்ப்பது?
அந்த மாதிரி ஒரு ஆஃபர் நமக்கு வருகிறது என்றால் அந்த சாட்டை லாங் பிரஸ் செய்து டெலீட் செய்திட வேண்டும்.
அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் இருந்து வரும் ஒரு whatsapp சாட்டை உடனடியாக லாங் பிரஸ் செய்து டெலீட் செய்திட வேண்டும்.
புதுவித மோசடி
இதுபோன்ற லிங்க் வந்தால் நமது போன் ஹேக் செய்யப்படும். அதனால் நாம் அதை டெலீட் செய்து விடுகிறோம். இதை பெரும்பாலானோர் செய்து வருகின்றனர்.
ஆனால், தற்போது வாட்ஸ்அப்பில் புதுவித மோசடி நடந்து வருகிறது. அதாவது, அறிமுகமான நபர்களிடம் இருந்தே மெசேஜ் வந்தால் நாம் என்ன செய்வது?
ஒரு உதாரணம் பார்ப்போம் வாங்க. நாம் அலுவலகத்தில் பணிபுரிந்தாலோ, ஒரு சொசைட்டியாக வாழ்ந்தாலோ நமக்கென்று ஒரு வாட்ஸ்அப் குரூப் இப்போது உருவாக்கப்படுகிறது. பலரும் அந்த குரூப்பில் இருந்து வருகிறோம். அந்த குரூப்பில் அனைவரையுமே நமக்கு தெரியுமா என்றால் நமக்கு தெரியாது. அவர்கள் யாராவது நமது எண்ணை எடுத்து மெசேஜ் செய்ய வாய்ப்புள்ளது.
ஒரு கார்டில் ஆஃபர் இருப்பது போன்ற செய்தியை அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு பிடிஎஃப் பார்மட்டாக நமக்கு வரும். ஆனால், அதை நாம் பதிவிறக்க கிளிக் செய்தது ஏபிகே ஃபார்மட்டாக மாறிவிடும். அது டவுன்லோடு ஆனதும் உங்கள் போனில் இன்ஸ்டால் ஆகிவிடும். உடனே உங்கள் போனில் உள்ள தகவல்கள் எடுக்க வாய்ப்பை ஏற்படுத்தும்.
அதைத் தொடர்ந்து உங்களுக்கு ஒரு ஓடிபி வரும். அதுவும் வாட்ஸ்அப் மூலமாகவே வரும் வகையில் செய்துவிடுவார்கள். அதன்மூலம் வங்கிக்கணக்கு யூசர்நேம், பாஸ்வேர்டு ஆகியவற்றை திருடி பணத்தை எடுக்க வாய்ப்புள்ளது.
சரி இதை தடுப்பது எப்படி?
இதற்கும் ஒரு வழி இருக்கிறது. ஆட்டோ டவுன்லோடு செலக்ட் ஆகியிருந்தால் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் சென்று அதை ஆஃப் செய்து விடுங்கள். இதனால், இதுபோன்று எதுவும் மோசடி மெசேஜ் நமக்கு வந்தாலும் தானாகவே டவுன்லோடு ஆகாது. நாம் அதை சந்தேகித்து டெலீட் செய்துவிடலாம் என்கின்றனர் தொழில்நுட்ப நிபுணர்கள்.
தமிழ்நாடு போலீஸ் சைபர் எச்சரிக்கை
மோசடி செய்பவர்கள் அதிக ஊதியம் பெறும் வெளிநாட்டு வேலைகளை வழங்குகிறோம் என கூறி, தொலைபேசி வழி நேர்காணல்களை நடத்துகிறார்கள். பல்வேறு போலி சாக்குப்போக்குகளை கூறி பாதிக்கப்பட்டவரிடமிருந்து பணம் கேட்கிறார்கள்.
1. எந்த முன்பணக் கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.
2. பின்னணி சரிபார்ப்பு (Background verification) அல்லது பயிற்சித் திட்டம் போன்ற எதற்கும் சட்டப்பூர்வ முதலாளிகள், முன்பண்ம் செலுத்துமாறு உங்களிடம் ஒருபோதும் கேட்க மாட்டார்கள்.
3. ஒரு நிறுவனம் முன்பணம் கேட்டால், அது ஒரு மோசடியாக இருக்கலாம்.
எந்தவிதமான நிதி சார்ந்த சைபர் குற்றத்தில் பாதிக்கப்பட்டால் உடனடியாக 1930 என்ற உதவி எண்ணிற்கு டயல் செய்யவும்.
உங்கள் புகாரை www.cybercrime.gov.in இல் பதிவு செய்யவும்.

டாபிக்ஸ்