Opposition meet: ’பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும்’ டி.ராஜா
”பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை பெங்களூருவில் தொடங்குகிறது”
பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டம் நாளை பெங்களூருவில் நடைபெற உள்ள நிலையில் பாரதிய ஜனதாவை ஆட்சியில் இருந்து அகற்ற அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் "இது இரண்டாவது கூட்டம். முதல் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது, இதில் 15 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்துகொண்டன. இந்த கூட்டத்தில் அதிக கட்சிகள் இருக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
பெங்களூருவில் நாளை காங்கிரஸ் நடத்தும் இரண்டாவது எதிர்க்கட்சி ஒற்றுமை கூட்டத்தில் குறைந்தது 24 அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் தேசியத் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே எழுதிய கடிதத்தில், “நமது ஜனநாயக அரசியலுக்கு அச்சுறுத்தலான பல்வேறு முக்கிய பிரச்சினைகளை நாங்கள் விவாதித்து, அடுத்த பொதுத் தேர்தலை ஒற்றுமையாகப் போராடுவது குறித்து ஒருமனதாக உடன்படிக்கைக்கு வந்ததால், இந்த சந்திப்பு பெரும் வெற்றி பெற்றது,” என்று கார்கே தனது அழைப்புக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
"இந்த விவாதங்களைத் தொடர்வதும், நாம் உருவாக்கிய வேகத்தை கட்டியெழுப்புவதும் முக்கியம் என்று நான் நம்புகிறேன். நமது நாடு எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வு காண நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மாலை 6.00 மணிக்கு பெங்களூரில் நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொள்ள வசதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். கூட்டம் ஜூலை 18, 2023 அன்று காலை 11.00 மணி முதல் தொடரும். உங்களை பெங்களூரில் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். கார்கே தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்