Wayanad LS bypoll: வயநாடு லோக்சபா இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி தொடர்ந்து முன்னிலை!
வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நவம்பர் 13 ம் தேதி நடைபெற்றது. போட்டியிட்ட 16 வேட்பாளர்களில், தேர்தலில் அறிமுகமாகும் பிரியங்கா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்.டி.எஃப் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் முக்கிய போட்டியாளர்கள்.
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் பிரியங்கா காந்தி வாத்ரா முன்னிலை வகித்து வருவதாக தொலைக்காட்சி சேனல் செய்திகள் தெரிவிக்கின்றன.
காலை 8 மணிக்கு பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் பதிவேறின. வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்பட்டன.

டாபிக்ஸ்