Fact Check : உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்தது முஸ்லீம் நபரா? பரவும் வதந்தி.. உண்மையில் நடந்தது என்ன?
Fact Check : சுங்கச்சாவடியை இடித்த ஜே.சி.பி. ஓட்டுநரான முகமது சாஜித் அலி கைது என்றுகூறி வீடியோவுடன் கூடிய செய்தி ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் என செய்தி பரவி வருகிறது. இது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.

உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்தது முஸ்லீம் நபரா? பரவும் வதந்தி.. உண்மையில் நடந்தது என்ன?
‘’ உத்தரப் பிரதேசத்தில் சுங்கச் சாவடியை இடித்த முஸ்லீம் நபர் கைது’’ என்று கூறி, சமூக வலைதளங்களில் பகிரப்படும் ஒரு தகவல் பற்றி ஆய்வு செய்தோம்.
இதனை வாசகர்கள் நமக்கு வாட்ஸ்ஆப் சாட்போட் வழியே அனுப்பி, உண்மையா என்று சந்தேகம் கேட்டனர்.
இதில், ‘’ உத்தரப் பிரதேசம்: சுங்கக்கட்டணம் கேட்டதால் சுங்கச்சாவடியை ஜே.சி.பி. கொண்டு உடைத்த முகமது சாஜித் அலி கைது..!,’’ என்று கூறப்பட்டுள்ளது.