Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்

Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்

Marimuthu M HT Tamil
Aug 02, 2024 09:53 AM IST

Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ வைரல் ஆன நிலையில், டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோர் டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டுள்ளனர்.

Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்
Lucknow: லக்னோவில் மழையில் சென்ற பெண்ணை துன்புறுத்தும் வீடியோ: டி.சி.பி., ஏ.டி.சி.பி., உள்ளிட்டோருக்கு டிரான்ஸ்ஃபர்

லக்னோவில் நடந்த மனித உரிமை அத்துமீறல்:

இதுதொடர்பாக 24 மணிநேரத்தில் 4 பேர் கைதுசெய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து 16 பேர் கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பாக லக்னோ போலீஸ் கமிஷனர் அமரேந்திர குமார் செங்கர் கூறியதாவது,"குற்றம்சாட்டப்பட்டவர்களில் இருவர், பவன் யாதவ் மற்றும் சுனில் குமார் ஆகியோர் சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் ஜூலை 31ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். முகமது அர்பாஸ் மற்றும் விராஜ் சாஹு ஆகியோர் வழங்கிய துப்பின் பேரில் கைது செய்யப்பட்டனர்" என்று லக்னோ போலீஸ் கமிஷனர் அமரேந்திர குமார் செங்கர் தெரிவித்தார்.

டென்ஷன் ஆன உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்:

இதுதொடர்பாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகஸ்ட் 1ல் தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு, இந்தச் சம்பவம் வெட்கக்கேடானது என்றார்.

மேலும், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தலின் பேரில், டி.சி.பி கிழக்கு, ஏ.டி.சி.பி கிழக்கு மற்றும் ஏ.சி.பி கோமதிநகர் ஆகியோர், உடனடியாகப் பணியில் அலட்சியம் காரணமாக தங்கள் பதவிகளில் இருந்து பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கோமதிநகர் இன்ஸ்பெக்டர், சம்தமுலக் சௌக்கியில் உள்ள அனைத்து போலீஸ்காரர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மீதமுள்ள சந்தேகத்துக்குரிய நபர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மற்ற குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழு குற்றம் சாட்டப்பட்ட 10 பேரை அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளுடன் அடையாளம் கண்டுள்ளது எனவும், அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜே.சி.பி மேலும் கூறினார்.

நடந்தது என்ன?

ஆகஸ்ட் 31ஆம் தேதி, பலத்த மழையால் லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில், தாஜ் ஹோட்டல் மற்றும் ஷீரோஸ் கஃபே அருகே சுரங்கப்பாதை செல்லுமிடத்தில் மழை நீர் தேங்கியிருக்கிறது. அப்போது பலர் வெள்ளத்தில் சிக்கிய நீரை பயணிகள்மீது தெளித்து துன்புறுத்தினர். அப்படி, இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து சென்ற பெண்ணையும், முன்னால் வாகனத்தை இயக்கிய நபர் மீது நீரைத்தெளித்தும்,

கார் ஜன்னல்கள் மற்றும் வைப்பர்களை உடைப்பது, தெருவிளக்குகளை உடைப்பது, தண்ணீர் தேங்கிய தெருவில் இருசக்கர வாகன ஓட்டிகளை தள்ளுவது போன்ற சம்பவங்களும் நடந்துள்ளன.

இது குறித்த வீடியோ வைரல் ஆகிய நிலையில், போலீசார் தடியடி நடத்தி குண்டர்களை வீதிகளில் இருந்து இழுத்துச் சென்றனர்.

மேலும் அவர்களின் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பின்னர் மாலையில், கோமதிநகர் காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட பவன் யாதவ் மற்றும் சுனில் குமார் ஆகிய இருவரை முதலில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைத்து குடியிருப்பாளர்களும் பெரும்பாலும் லக்னோவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் இருவர் ஜுகூலியைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் வினீத் காண்ட், வினய் காண்ட் மற்றும் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.