இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபருக்கு உற்சாக வரவேற்பு.. கோயிலில் வழிபாடு.. பிரதமர் மோடியுடன் சந்திப்பு எப்போது?
அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவியும் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்டவருமான உஷா வான்ஸ் ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன் ஏப்ரல் 21 முதல் 24 வரை முதல் அதிகாரப்பூர்வ பயணமாக இந்தியா வந்தனர்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் அவர்களது மூன்று குழந்தைகள் திங்கள்கிழமை காலை தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்கு வருகை தந்தனர். வான்ஸ், ஏப்ரல் 21 முதல் 24 வரை நான்கு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நாட்டிற்கு வந்துள்ளார். 4 டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய ஜே.டி. வான்ஸின் குழந்தைகள் இந்திய உடையில் கவனத்தை ஈர்த்தனர். மாலை 6:30 மணிக்கு 7 லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை ஜே.டி. வான்ஸ் சந்திப்பார்.
டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலின் செய்தித் தொடர்பாளர் ராதிகா சுக்லா கூறுகையில், 'அமெரிக்க துணை அதிபர் 55 நிமிடங்கள் கோயிலை ஆராய்ந்து, அதன் சிக்கலான சிற்பங்களைப் பாராட்டி, உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தார். முழு குடும்பமும் சுமார் 55 நிமிடங்கள் இங்கு இருந்தது. உள்ளே இருந்த ஒரு மணி நேர அனுபவம் மறக்க முடியாதது. வரவேற்புக்குப் பிறகு சுவாமி நாராயணனின் சரணார்விந்தத்துடன் அவர்கள் புறப்பட்டனர். அவர்கள் பாரத உபவனை பார்வையிட்டனர். அவர்களுக்கு அந்தத் தோட்டம் மிகவும் பிடித்திருந்தது. மேலும் அவர்கள் கஜேந்திர பீடத்தை பார்வையிட்டனர். செதுக்கப்பட்ட சிற்பங்களைப் பார்த்து அவர்கள் மிகவும் திகைத்துப் போனார்கள். பின்னர் அவர்கள் மாடிக்குச் சென்று கருவறையில் உள்ள சுவாமிநாராயணர் சிலையை தரிசனம் செய்த பின்னர், உலக அமைதிக்காக பிரார்த்தனை செய்தனர்" என்றார் ராதிகா சுக்லா.