‘நீதிபதிக்கு ஒரு நியாயம்.. சாமானியனுக்கு ஒரு நியாயமா?’ - நீதித்துறை மீது துணை ஜனாதிபதி பாய்ச்சல்!
‘மூன்று நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை செய்து வருகிறது, ஆனால் விசாரணை என்பது நிர்வாக அதிகார வரம்புக்கு உட்பட்டது, நீதித்துறை அதிகார வரம்புக்கு அல்ல. அந்தக் குழு அரசியலமைப்பு அல்லது சட்டத்தின் எந்தவொரு விதியின் கீழும் அமைக்கப்படவில்லை’

உச்ச நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் அதிக அளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாதது குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவுக்கு குற்றச்சாட்டில் இருந்து விலக்கு கிடைக்குமா? என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
தாமதத்திற்கு என்ன காரணம்?
'அது (பணம் கண்டுபிடிப்பு) ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடந்திருந்தால், எஃப்ஐஆர் பதிவு செய்வது மின்னல் வேகத்தில் இருந்திருக்கும். ஆனால் இந்த வழக்கில் அது எருமை வண்டி வேகத்தில்கூட இல்லை' என்று அவர் கடுமையாக சாடினார். ஏழு நாட்கள் வரை யாருக்கும் இது பற்றித் தெரியவில்லை. நாம் நம்மை நாமே கேள்வி கேட்க வேண்டும். இந்தத் தாமதத்திற்கு என்ன காரணம்? இது மன்னிக்கத்தக்கதா? என்றும் துணை ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
