உத்தரகண்ட் பனிச்சரிவு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக அதிகரிப்பு.. கண்டெய்னரில் சிக்கி இருந்த 9 பேர்
உத்தரகண்ட் பனிச்சரிவு: ராணுவம், ஐடிபிபி, விமானப்படை, என்டிஆர்எஃப் மற்றும் எஸ்டிஆர்எஃப் இணைந்து பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். தற்போது வரை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என உயர்ந்துள்ளது.

உத்தரகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் உள்ள மனா கிராமத்துக்கு அருகே கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 என ஞாயிற்றுக்கிழமையன்று உயர்ந்துள்ளது.
"பனிச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேடுதல் நடவடிக்கையின் போது பனிகளுக்கு உள்ளே சிக்கியிருந்த மேலும் ஒரு உடல் ராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இந்த உடல் மனா போஸ்ட் பகுதிக்கு கொண்டு வரப்படுகிறது. மூன்று பேர் வரை காணவில்லை.
இராணுவத்தினர், இந்தோ-திபெத் எல்லை காவல் படை, விமானப்படை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவுடன் உடன் இணைந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கியிருக்கும் நபர்களை வெளியேற்றுவதற்கான பணிகளை அனைவரும் ஒருங்கிணைந்து செய்து வருகிறோம்" என தலைமைச் செயலாளர் (பாதுகாப்பு) லெப்டினன்ட் கர்னல் மணீஷ் ஸ்ரீவஸ்தவா இந்துஸ்தான் டைம்ஸிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க: சீனா எல்லை அருகே ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 7 சுற்றுலா பயணிகள் பலி
உத்தரகண்ட் பனிச்சரிவு குறித்த லேட்டஸ்ட் அப்டேட்
1. மனா பகுதியில் எல்லை சாலைகள் அமைப்பு (BRO) பகுதியில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கைகளை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, தொடர்ந்து இரண்டாவது நாளாக டேராடூனில் உள்ள ஐடி பூங்காவில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்று பார்வையிட்டார்.
