தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Viral: பகவான் கிருஷ்ணரையே திருமணம் செய்த கல்லூரி மாணவி!

Viral: பகவான் கிருஷ்ணரையே திருமணம் செய்த கல்லூரி மாணவி!

Karthikeyan S HT Tamil
Mar 18, 2023 09:07 PM IST

சிறுவயதில் இருந்தே கிருஷ்ணர் மீது கொண்ட அதீதபக்தியால் சட்டம் பயிலும் மாணவி ஒருவர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கிருஷ்ணர் சிலையை மணந்த கல்லூரி மாணவி.
கிருஷ்ணர் சிலையை மணந்த கல்லூரி மாணவி.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத் திருமணம் அவரது பெற்றோர் சம்மதத்துடனே சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. தன்மீதான சுய அன்பு மற்றும் சுய அங்கீகாரத்தை வெளிப்படுத்த 'சோலோகாமி' முறையில் திருமணம் செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். இந்த வரிசையில், தற்போது உத்தரப்பிரதேசத்தில் சட்டம் பயிலும் பெண் ஒருவர் கடவுள் கிருஷ்ணரின் சிலைக்கு மாலை அணிவித்து அணிவித்து திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஒரையா பகுதியைச் சேர்ந்தவர் ரக்சா சோலன்கி. 30 வயதான இவர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வருகிறார். ரக்சாவுக்கு சிறு வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணர் மீது அதே அன்பு கொண்டிருந்தார். 

இந்த நிலையில் திருமணம் செய்தால் கிருஷ்ணரை மட்டும்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு முதல் கிருஷ்ணரையே தன் கணவராக கருதி வாழ்ந்து வந்த அவர் பெற்றோர் சம்மதத்துடன் மதுரா சென்று கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்து கொண்டார். வட மாநில திருமணங்களைப்போல ரக்சா தன் கையில் கிருஷ்ணர் சிலையை ஏந்தி அக்னியைச் சுற்றி வந்து கடவுளை திருமணம் செய்து கொண்டுள்ளார். குடும்பத்தினர், உறவினர்கள் சூழ நேற்று முன்தினம் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

கிருஷ்ணர் அடிக்கடி கனவில் வந்து தனது கழுத்தில் மாலை அணிவிப்பதாகவும், அவரையே கணவராக கருதி வாழ்ந்து வருவதாகவும் அவர் பலமுறை கூறியிருக்கிறார். இதையடுத்து அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப பெற்றோர் அவரை கிருஷ்ணர் சிலைக்கே திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த திருமண விழா மதுராவில் விசேஷமாக நடந்ததை அடுத்து உற்றார் உறவினர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த வினோதமான திருமண சம்பவம் இணையவாசிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்