UPSC Recruitment 2024: பல்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்ட யுபிஎஸ்சி!
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III, உதவி விலங்கியல், விஞ்ஞானி-B மற்றும் உதவி தொழில்துறை ஆலோசகர் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறையைத் தொடங்கியுள்ளது யுபிஎஸ்சி
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன், யுபிஎஸ்சி ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III, உதவி விலங்கியல், விஞ்ஞானி-பி மற்றும் உதவி தொழில்துறை ஆலோசகர் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறையை தொடங்கியுள்ளது. விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 1, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஎஸ்சி ஆள்சேர்ப்பு 2024 காலியிட விவரங்கள்:
121 காலியிடங்களை நிரப்ப இந்த ஆட்சேர்ப்பு இயக்கம் நடத்தப்படுகிறது.
உதவி தொழில்துறை ஆலோசகர்: 1
விஞ்ஞானி-பி (ரப்பர், பிளாஸ்டிக் மற்றும் ஜவுளி): 1
உதவி விலங்கியல் நிபுணர்: 7
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III உதவிப் பேராசிரியர் ஓட்டோ-ரினோ-லாரிஞ்ஜாலஜி (காது, மூக்கு மற்றும் தொண்டை): 8
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III உதவிப் பேராசிரியர் (விளையாட்டு மருத்துவம்): 3
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (குழந்தை அறுவை சிகிச்சை): 3
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (பிளாஸ்டிக் & புனரமைப்பு அறுவை சிகிச்சை): 10
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III ஓட்டோ-ரினோ-லாரிஞ்ஜாலஜி (காது, மூக்கு மற்றும் தொண்டை): 11
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (இதயவியல்): 1
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (டெர்மட்டாலஜி): 9
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (பொது மருத்துவம்): 37
ஸ்பெஷலிஸ்ட் கிரேடு III (மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவம்): 30
யுபிஎஸ்சி ஆள்சேர்ப்பு 2024 விண்ணப்பக் கட்டணம் விவரம்:
விண்ணப்பதாரர்கள் (பெண்கள்/எஸ்சி/எஸ்டி/பெஞ்ச்மார்க் மாற்றுத்திறனாளிகள் தவிர, கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்) ரூ. 25 கட்டணம் செலுத்த வேண்டும்.
பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) ஏதேனும் ஒரு கிளையில் பணமாகவோ அல்லது வங்கியின் நெட் பேங்கிங் வசதியைப் பயன்படுத்துவதன் மூலமாகவோ அல்லது விசா/மாஸ்டர்/ரூபே/கிரெடிட்/டெபிட் கார்டு/யுபிஐ பேமெண்ட் மூலமாகவோ மட்டுமே செலுத்தலாம்.
UPSC ஆள்சேர்ப்பு 2024: எப்படி விண்ணப்பிப்பது?
upsconline.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று, அதன் முகப்பு பக்கத்தில், "பல்வேறு ஆள்சேர்ப்பு பதவிகளுக்கான ஆன்லைன் ஆட்சேர்ப்பு விண்ணப்பம் (ORA)" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு அதில் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய பின்பு, அங்கு கேட்கப்பட்டிருக்கும் அனைத்து ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.
இறுதியில் படிவத்தை சமர்பத்து, தேவைப்பட்டால் அதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்
டாபிக்ஸ்