தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Upsc Prelims Exam 2023 : Upsc Exams Today! Here Are The Full Details!

UPSC Prelims Exam 2023 : இன்று யுபிஎஸ்சி தேர்வுகள்! முழு விவரங்கள் இதோ!

Priyadarshini R HT Tamil
May 28, 2023 06:13 AM IST

UPSC Prelims Exam 2023 : இந்திய குடிமைப்பணி 2023ம் ஆண்டு முதல்நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று நடக்கிறது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் கலந்துகொள்வதற்கு ஏதாவது ஓர் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். இந்தியாவில் நடைபெறும் மிகக்கடினமான தேர்வுகளில் முதன்மையானது.

அண்மையில் 2022ம் ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் வெளியானது. அதில் 933 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். முதல் 4 இடங்களை பெண்களை கைப்பற்றியிருந்தார்கள்.

கடந்த ஆண்டுக்கான இந்தியக் குடிமைப் பணி முதல்நிலைத் தேர்வு ஜூன் 5ம் தேதி நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு செப்டம்பர் 16 – 25ம் தேதி வரை முதன்மைத் தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவுகள் டிசம்பர் 6ம் தேதி வெளியானது.

முதன்மைத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்தாண்டு மார்ச் 13ம் தேதி முதல் மே 18ம் தேதி வரை தலைநகர் டெல்லியில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இவர்களுக்கான தேர்வு முடிவுகள் மே 23 அன்று அறிவிக்கப்பட்டன. இதில் 933 பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழ்நாட்டில் இருந்து 42 பேர் தேர்ச்சி பெற்றனர்.

இந்நிலையில் குடிமைப் பணிக்கான 2023ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வின் முதல் நிலைத்தேர்வு (Prelims Exam) இன்று இந்தியா முழுவதும் நடக்கிறது.

இரண்டு தாள்களும் காலை, மதியம் என இரு வேளைகளில் நடைபெற உள்ளன. பொது படிப்புகள் எனப்படும் ஜிஎஸ் (GS I) தாளுக்கான தேர்வு காலையிலும் சிசேட் (CSAT) தேர்வு மதியமும் நடைபெறுகிறது.

காலை 9 மணிக்கு தொடங்கும் தேர்வு மதியம் 11.30 வரை நடைபெறுகிறது. இதற்குக் காலை 9.20 மணிக்கு முன்னதாக தேர்வர்கள் தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும்.

சிசேட் தேர்வு மதியம் 2.30 – 4.30 வரை நடக்கிறது. இதற்குத் தேர்வர்கள் மதியம் 2.20 மணிக்கு முன்னதாக தேர்வு மையத்தின் உள்ளே இருக்க வேண்டும். அதற்குப் பிறகு யாரும் உள்ளே சென்று தேர்வு எழுத முடியாது.

தேர்வர்கள் மொபைல் போனை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை. அதேபோல பேஜர், பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் கொண்டு செல்லவும் அனுமதி கிடையாது.

யுபிஎஸ்சி தேர்வு எழுத புகைப்பட அடையாள அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் www.upsconline.nic.in  அல்லது www.upsc.gov.in என்ற இணையதள முகவரியை க்ளிக் செய்து, நுழைவுச் சீட்டைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்