Crime : நெஞ்சே பதறுதே.. கணவரை கட்டிப்போட்டு 5 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி.. கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Crime : நெஞ்சே பதறுதே.. கணவரை கட்டிப்போட்டு 5 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி.. கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்!

Crime : நெஞ்சே பதறுதே.. கணவரை கட்டிப்போட்டு 5 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி.. கள்ளக்காதலால் நேர்ந்த விபரீதம்!

Divya Sekar HT Tamil Published Jul 30, 2023 06:57 AM IST
Divya Sekar HT Tamil
Published Jul 30, 2023 06:57 AM IST

உத்தரப்பிரதேசத்தில் கணவனை மனைவியே கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி கால்வாயில் வீசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவரை கட்டிப்போட்டு 5 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி
கணவரை கட்டிப்போட்டு 5 துண்டுகளாக வெட்டி வீசிய மனைவி

இதையடுத்து துலாரோ தேவியை கஸ்டடியில் எடுத்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது தான் அதிர்ச்சிதகவலை தெரிவித்துள்ளார். தனது கணவரை கொலை செய்து 5 துண்டுகளாக வெட்டி அருகில் உள்ள கால்வாயில் வீசிவிட்டதாக கூறி போலீசாரையே அதிர வைத்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் பகாரியா கிராமத்தில் உள்ள கால்வாயில் தேடுதல் பணியை தொடங்கிய போலீசார் கால்வாயில் கிடந்த பை ஒன்றில் இருந்து ராம்பாலின் கைகள், கால்கள் மற்றும் தலையை மீட்டுள்ளனர்.

கணவன் மனைவி இருவருமே தகாத உறவில் இருந்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகாராறு ஏற்பட்டு வந்துள்ளது. துலாரோ தேவியை தினமும் குடிபோதையில் உடல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார் ராம்பால். அவருடைய சித்ரவதையை தாங்க முடியாத துலாரோ தேவி கடந்த 23 ஆம் தேதி ராம்பால் தூங்கிக் கொண்டிருந்த போது அவருடைய கை கால்களை கட்டிலில் இறுக்கமாக கட்டிப்போட்டுள்ளார். பின்னர் மண்வெட்டியின் கைப்பிடியால் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் கணவர் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் காதலனிடம் உதவி கோரியுள்ளார். ஆனால் அவர் உதவி செய்ய மறுத்துள்ளார். பின்னர் உடலை துண்டுதுண்டாக்கி அப்புறப்படுத்துமாறு காதலன் கூறியுள்ளார். இதையடுத்து கைகள், கால்கள் மற்றும் தலையை துண்டு துண்டுகளாக வெட்டி அங்கிருந்த கால்வாயில் வீசியுள்ளார். இதையடுத்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

தூங்கிக் கொண்டிருந்த கணவரை கட்டிப்போட்டு மனைவி 5 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.