Man killed wife in UP: உபியில் மனைவியை கொன்று துண்டு துண்டாக வீசிய கணவர்
போதை பழக்கம், வேறொருவருடன் பழக்கம் என மனைவியின் நடவடிக்கையில் ஆத்திரம் அடைந்த கணவர், நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துவிட்டு துண்டு துண்டாக வெட்டி வீசியுள்ள சம்பவம் உத்தர பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் சீத்தாபூர் மாவட்டத்தின் குலாரிஹா பகுதியில் பெண் ஒருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. கடந்த 8ஆம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்த நிலையில், தடயவியல் நிபுணர்களின் உதவியோடு அந்தப் பெண்ணின் அடையாளத்தை போலீசார் கண்டறிந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்
இதில், சடலமாக கிடந்த அந்தப் பெண்ணின் பெயர் ஜோதி என்பதும், அவரது கணவர் பங்கஜ் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலீசார் தேடுதல் வேட்டை நிகழ்த்தியதில் பங்கஜ் பிடிபட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மனைவி ஜோதியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பங்கஜ் - ஜோதிக்கு திருமணம் ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் போதை பழக்கத்துக்கு அடிமையான ஜோதி, போதை பொருள்களை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளாராம். அதுமட்டுமில்லாமல் வேறொருவரிடம் பழக்கம் ஏற்பட்டு தனது வீட்டை விட்டு வெளியேறி அவருடன் தங்கியுள்ளார்.
ஜோதியின் இந்த செயலால் ஆத்திரம் அடைந்த அவரது கணவர் பங்கஜ், அவரை கண்டித்துள்ளார். ஆனால் ஜோதி தனது நடவடிக்கையை தொடர்ந்துள்ளார். இதனால் தனது நண்பருடன் சேர்ந்து ஜோதியை கொலை செய்ய பங்கஜ் முடிவுசெய்துள்ளார்.
அதன்படி, நண்பருடன் இணைந்து மனைவி ஜோதியை கொலை செய்துள்ளார் பங்கஜ். இதில் அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக உடலை பல துண்டுகளாக வெட்டி வீசியுள்ளார்.
இதையடுத்து பங்கஜ் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டாபிக்ஸ்