ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு மெகா சலுகை: ஐபாட் வாங்க அனுமதி
ஒன்றிய அரசு அலுவலக அதிகாரிகளுக்கு ஐபாட் வாங்க படி தரப்படும் என ஆளும் பாஜக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
புதுதில்லி: தமிழகத்தில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு செல்போன் மற்றும் டேட்டா வசதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஒன்றிய அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்படவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒன்றிய அரசு அதிகாரிகள் ஐபாட் வாங்குவதற்கான தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர் அட்வான் அலவன்ஸ் மூலம் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு அதிகாரிகள் தங்களுக்கென ஐபாட்களை வாங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்த அறிவிப்பு ஒன்றிய அரசு அதிகாரிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிதியமைச்சகத்தின்கீழ் செயல்படும் செலவுகள் துறை இதுகுறித்து அளித்த விளக்கத்தில் அதிகாரிகள் கம்ப்யூட்டர் வாங்கும் திட்டத்தின்கீழ் ஐபாட்களை வாங்கிக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்