மத்திய பட்ஜெட் 2025 Live : இன்று மத்திய பட்ஜெட் 2025.. அறிவிப்புகள் அப்டேட் உடனுக்குடன்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  மத்திய பட்ஜெட் 2025 Live : இன்று மத்திய பட்ஜெட் 2025.. அறிவிப்புகள் அப்டேட் உடனுக்குடன்!

Union Budget 2025 Live : இன்று மத்திய பட்ஜெட் 2025.. அறிவிப்புகள் அப்டேட் உடனுக்குடன்!

மத்திய பட்ஜெட் 2025 Live : இன்று மத்திய பட்ஜெட் 2025.. அறிவிப்புகள் அப்டேட் உடனுக்குடன்!

07:53 AM ISTFeb 01, 2025 01:23 PM HT Tamil
  • Share on Facebook
07:53 AM IST

மத்திய பட்ஜெட் 2025 Live : : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பு, அறிவிப்புகள், அதன் தாக்கம், விமர்சனம் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் இந்த பகுதியில் உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

Sat, 01 Feb 202507:52 AM IST

பட்ஜெட் 2025: முறைசாரா தொழிலாளிகளுக்கான திட்டம்

Gig workers என அழைக்கப்படும் உணவு டெலிவரி உள்ளிட்டவற்றை மேற்கொள்ளும் முறைப்படுத்தப்படாத தொழிலாளர்கள் இ-ஷ்ரம் (e-shram) இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர்களுக்கு ஒன்றிய அரசின் காப்பீடு திட்டத்தின் கீழ் சுகாதார காப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

Sat, 01 Feb 202507:51 AM IST

பட்ஜெட் 2025: மருந்துகள் விலை குறையும்

அடிப்படை சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் சுமார் 36 உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருந்துகள் சேர்க்கப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இதனால் மருந்துகள் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Sat, 01 Feb 202507:53 AM IST

பட்ஜெட் 2025:உயரும் FMCG பங்குகள்!

புதிய வரி விதிப்பின் கீழ் 12 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்று நிதியமைச்சர் கூறியதை அடுத்து HUL, கோத்ரேஜ் CP, டிரென்ட், வோல்டாஸ், ITC, D Mart ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன

Sat, 01 Feb 202507:48 AM IST

பட்ஜெட் 2025: நடுத்தர மக்களுக்காக!

வரி அடுக்குகளில் மாற்றங்கள் குறித்த அறிவிப்பைத் தொடர்ந்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது ‘எக்ஸ்’  பக்கத்தில் ‘நடுத்தர வர்க்கத்தினர் எப்போதும் பிரதமர் மோடியின் இதயத்தில் உள்ளனர்’ என பதிவிட்டுள்ளார்.

Sat, 01 Feb 202506:44 AM IST

பட்ஜெட் 2025: 12 லட்சம் வரை வரி கிடையாது

12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Sat, 01 Feb 202506:33 AM IST

பட்ஜெட் 2025: திருக்குறளை மேற்கோள் காட்டி பேச்சு

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி வாழுங் குடி என்ற திருக்குறளை மேற்கொள் காட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். 

Sat, 01 Feb 202506:18 AM IST

பட்ஜெட் 2025: ஜியோ ஸ்பேசஸ் இயக்கம்

விண்வெளி துறை வளர்ச்சிக்காக ஜியோ ஸ்பேசஸ் இயக்கம் உண்டாக்கப்படும்: நிதியமைச்சர்

Sat, 01 Feb 202506:17 AM IST

பட்ஜெட் 2025: புதிய வருமான வரி மசோதா

புதிய வருமானவரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும். 63 ஆண்டுகால வருமான வரி முறைகள் மாற்றி அமைக்கப்படும்: நிதியமைச்சர்

Sat, 01 Feb 202506:17 AM IST

பட்ஜெட் 2025: ஐஐடி பாட்னா விரிவாக்கம்

பீகார் தலைநகரில் உள்ள ஐஐடி பாட்னாவை விரிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பாட்னா விமான நிலையத்தை மேம்படுத்தவும் புதிய திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

Sat, 01 Feb 202505:59 AM IST

பட்ஜெட் 2025: பீகாரில் உணவுத் தொழில்நுட்ப நிறுவனம்

பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவோர் மற்றும் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவோம். இது விவசாயிகளுக்கு மேம்பட்ட வருமானம், திறன் தொழில்முனைவோர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்: நிதியமைச்சர்

Sat, 01 Feb 202505:46 AM IST

பட்ஜெட் 2025: அசாமில் யூரியா ஆலை

அசாம் மாநிலத்தில் புதிய யூரியா ஆலை அமைக்கப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

Sat, 01 Feb 202505:45 AM IST

பட்ஜெட் 2025: ’பீகார் மாநிலத்திற்கு புதிய திட்டங்கள்!’

1.70 லட்சம் விவசாயிகள் பயன்பெரும் வகையில் திட்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. பீகார் மாநில விவசாயிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் வளர்ச்சிக்காக புதிய திட்டம் கொண்டு வரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

Sat, 01 Feb 202505:44 AM IST

பட்ஜெட் 2025: ’பருப்பு உற்பத்தியை பெருக்க திட்டம்’

உள்நாட்டிலேயே துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் உற்பத்தியை பெருக்க அரசு திட்டமிட்டு உள்ளது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசுகளுடன் இணைந்து திட்டம் கொண்டு வரப்படும்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

Sat, 01 Feb 202505:42 AM IST

பட்ஜெட் 2025: ’6 அம்ச திட்டத்திற்கு முக்கியத்துவம்’

நடப்பு பட்ஜெட்டில் 6 அம்ச திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து உள்ளோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை

Sat, 01 Feb 202505:41 AM IST

பட்ஜெட் 2025: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் டாக்கல் செய்யும் போது காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். 

Sat, 01 Feb 202505:39 AM IST

பட்ஜெட் 2025: ’இந்தியா வேகமாக வளர்கிறது’

உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்கும் பணியை செய்து வருகிறோம்- நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமம் உரை

Sat, 01 Feb 202505:38 AM IST

பட்ஜெட் 2025: பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் தாக்கல் செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றி வருகிறார். 

Sat, 01 Feb 202505:37 AM IST

பட்ஜெட் 2025: இனிப்பு கலந்த தயிர் ஊட்டிய திரெளபதி முர்மு

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்னதாக ராஷ்ட்ரபதி பவனில் குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தா நிதியமைச்சார் நிர்மலா சீதாராமன். அப்பது அவருடன் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி உடன் இருந்தார்.

இந்த சந்திப்பின்போது நிர்மலா சீதாராமன் மற்றும் பங்கஜ் செளத்ரி ஆகியோருக்கு இனிப்பு கலந்த தயிரை ஊட்டி திரெளபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Sat, 01 Feb 202504:36 AM IST

பட்ஜெட் 2025: பங்குசந்தையில் சென்செக்ஸ், லிப்டி உயர்வு 

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் சனிக்கிழமையான இன்று பங்குச்சந்தை நடைபெறுகிறது. அதன் படி சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் கடுமையாக உயர்ந்துள்ளன

Sat, 01 Feb 202504:12 AM IST

பட்ஜெட் 2025:  குடியரசு தலைவரை சந்தித்த நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் உள்ள  குடியரசு தலைவர் துரெளபதி முர்முவை, பட்ஜெட் ஆவணங்களுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துள்ளார்

Sat, 01 Feb 202503:53 AM IST

பட்ஜெட் 2025: திருமணமான தம்பதிகளுக்கு புதிய வரிமுறை

 

திருமணம் ஆன தம்பதிகளுக்கு விதிக்கப்படும் கூட்டு வரிமுறை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வரும் நிலையில் இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது

Sat, 01 Feb 202503:02 AM IST

வளர்ச்சி அடைந்த இந்தியாவை எட்டும் விதமாக பட்ஜெட் - பிரதமர் மோடி

 

செல்வம் பெற, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு செல்வங்களை வழங்க லட்சுமி தேவியை பிரார்த்திக்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற இலக்கை எட்ட இந்த பட்ஜெட் புதிய ஆற்றலை வழங்கும். பெண்களின் சம உரிமையை உறுதி செய்யும் முக்கிய முடிவுகள் நடப்பு தொடரில் எடுக்கப்படும் என்று பிரதமர் மோடி பட்ஜெட் குறித்து கூறியுள்ளார்

Sat, 01 Feb 202502:30 AM IST

எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் தாக்கல்

மத்திய பட்ஜெட்டை தொடர்ச்சியாக எட்டாவது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார் 

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், 2வது பகுதி மார்ச் 10 முதல் ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Sat, 01 Feb 202501:10 AM IST

ஜவுளித்துறையில் இறக்குமதி வரியை நீக்கம்

ஜவுளி உற்பத்தியில் பெரிதாக பாதிப்பை ஏற்படுத்த கூடிய மூலப்பொருள்களின் இறக்குமதி வரி நீக்கப்பட வேண்டும். ஜவுளி துறைக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது

Fri, 31 Jan 202502:08 PM IST

Union Budget 2025 Live: எதிர்பார்ப்புகள் என்ன

Union Budget 2025 Live: வருமான வரி, இதர பிற வரிகள் தொடர்பான புதிய அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு பலரிடத்திலும் உள்ளது. 

Fri, 31 Jan 202502:08 PM IST

Union Budget 2025 Live: முக்கிய அறிவிப்பு உண்டா?

Union Budget 2025 Live: டெல்லி சட்டமன்ற தேர்தல் வருவதால், இன்றைய பட்ஜெட்டில் ஏதாவது முக்கிய அறிவிப்புகள் வருமா என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. 

Fri, 31 Jan 202502:08 PM IST

Union Budget 2025 Live: இன்று தாக்கல் ஆகும் பட்ஜெட்

Union Budget 2025 Live: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்

Whats_app_banner

டாபிக்ஸ்