University Grants Commission: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசியின் அதிரடி முடிவு!
பல்வேறு தொழில்முறை பின்னணியைச் சேர்ந்த வேட்பாளர்கள் துணைவேந்தர்களாக மாற அனுமதிக்கும் புதிய வழிகாட்டுதல்களை யுஜிசி முன்மொழிகிறது மற்றும் ஆசிரிய ஆட்சேர்ப்பு அளவுகோல்களை எளிதாக்குகிறது.

University Grants Commission: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசியின் அதிரடி முடிவு..
புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு யுஜிசி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் வழங்கும் பட்டங்கள் செல்லாது எனவும், பல்கலைக்கழக மானிய குழு அங்கீகாரம் ரத்து, ஆன்லைன் வழியிலான கல்வி திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும் எனவும் யுஜிசி அதிரடியாக தெரிவித்துள்ளது.
‘துணைவேந்தர் தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார். பல்கலை., துணைவேந்தர் நியமனத்திற்கான தேடுதல் குழுவை, வேந்தரான ஆளுநரே அமைப்பார்’ எனவும் UGC வெளியிட்டுள்ள புதிய வரைவு விதிகளில் கூறப்பட்டுள்ளது.
இந்த வரைவு விதிகளின்படி 3 பேர் கொண்ட தேடுதல் குழுவில் மாநில அரசின் உறுப்பினர் இனி இடம்பெற முடியாது. ஆளுநர், UGC, பல்கலை., நிர்வாக குழு ஆகியோர் தலா ஒரு உறுப்பினரை தேடுதல் குழுவுக்கு பரிந்துரைப்பார்கள்.
