Kuno National Park : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு வேங்கைபுலி இறப்பு - ஒரே மாதத்தில் இரு துயர சம்பவம்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Kuno National Park : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு வேங்கைபுலி இறப்பு - ஒரே மாதத்தில் இரு துயர சம்பவம்

Kuno National Park : குனோ தேசிய பூங்காவில் மேலும் ஒரு வேங்கைபுலி இறப்பு - ஒரே மாதத்தில் இரு துயர சம்பவம்

Priyadarshini R HT Tamil
Apr 24, 2023 12:04 PM IST

Cheetah died : மத்திய பிரேதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு அழைத்து வரப்பட்ட வேங்கை புலிகளில் மேலும் ஒரு வேங்கைப்புலி உயிரிழந்து. ஒரே மாதத்தில் இது இரண்டாவது சம்பவம் நடைபெற்றுள்ளது. உதய் என்ற வேங்கைப்புலி பிப்ரவரி 18ம் தேதி தென்னாப்பிரிக்கா வாட்டர்பெர்க் பயோஸ்பியரில் இருந்து இங்கு அழைத்துவரப்பட்டது.

மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்த வேங்கைப்புலி
மத்திய பிரதேசம் குனோ தேசிய பூங்காவில் உயிரிழந்த வேங்கைப்புலி

அது இறந்ததற்கான காரணம் உடற்கூராய்வு சிகிச்சைக்குப்பின்னரே தெரியவரும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக வனத்துறையினர் ஆய்வு செய்ய சென்றபோது காலை 9 மணிக்கு உதய் சோர்வாக அமர்ந்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் அதன் அருகில் சென்றபோது, அது எழுந்தது. ஆனால், அதனால் நிற்க முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விதிமுறைகளின் படி, மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அங்கிருந்த வனவிலங்கு மருத்துவக்குழுவினர் அந்த வேங்கைப்புலியை பார்வையிட்டனர். அப்போது அது நோய்வாய்ப்பட்டிருப்பது தெரியவந்தது. மருத்துவர்களும், வேங்கைப்புலி பாதுகாப்பு நிதியின் வேங்கைப்புலி சிறப்பு நிபுணர்களும் உடனடியாக அந்த நோய்வாய்ப்பட்ட வேங்கைப்புலியை பொமா தனிமை முகாமுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள் என்று மத்திய பிரதேச வனவிலங்குகள் தலைமை வாடர்ன் ஜே.எஸ்.சவுகான் தெரிவித்தார்.

ஆனாலும் இரண்டு மணிநேரத்திற்கு பின்னர் அந்த வேங்கைப்புலி சுயநினைவை இழந்தது. உடனடியாக மேல்சிகிச்சைக்காக தனிமைப்படுத்தப்பட்ட வார்டுக்கு வேங்கைப்புலி மாற்றப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி 4 மணியளவில் உதய் இறந்தது. ஆனால், வேங்கைப்புலியின் இறப்புக்கான காரணம் உடற்கூராய்வு செய்த பின்னர்தான் தெரியவரும் என்று சவுக்கான் தெரிவித்தார்.

ஒரு மாதத்தில் குனோ தேசிய பூங்காவில் நடைபெறும் இரண்டாவது இறப்பு உதயினுடையது. கடந்த மாதம் சஷா என்று முதல் பேட்சில் நமீபியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட வேங்கைப்புலி சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது.

உதய், தென்னாப்பிரிக்காவின் வாட்டர்பெர்க் பயோஸ்பியரில் இருந்து பிப்ரவரி 18ம் தேதி கொண்டு வரப்பட்டது. கடந்த செவ்வாயன்று வேட்டையில்லா தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அண்மையில்தான இந்த வேங்கைப்புலிக்கு உதய் என்று பெயரிடப்பட்டது.

உதய் நீண்டநாள் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தது. இதை அந்த வேங்கைப்புலி இறந்தபின்னர் தென்னாப்பிரிக்க வேங்கைபுலிகள் நிபுணர் வின்சென்ட் வான்டெர் மெர்வே தெரிவித்தார். இவர் மெட்டா பாப்புலேசன் திட்டத்தின் தலைவர்.

மற்ற வேங்கைப்புலிகளை விட உதய் கடுமையாக இருந்தது என்றும், முன்னர் அது ஆரோக்கியமாக இருந்தது என்றும், சிறைபிடிக்கப்பட்டபின்னர்தான் அதன் ஆரோக்கியத்தை இழந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்களை கூண்டுகளில் அடைக்கக்கூடாது,. அவற்றை சுதந்திரமாக திறந்துவிட வேண்டும் என்று மெர்சே தெரிவித்தார். சியாயாவுக்கு பிறந்த 4 குட்டிகளைத்தவிர, உதயின் இறப்புக்குப்பின்னர் 18 வேங்கைபுலிகள் தேசிய பூங்காவில் உள்ளன.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 17ம் தேதி பிரதமர் மோடி, நமீபியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட வேங்கைபுலிகளை வனப்பகுதிக்குள் திறந்துவிட்டார். 1952ம் ஆண்டு இந்த இனம் அழிவில் உள்ளது என்று அறிவிக்கப்பட்ட பின்னர், நீண்ட முயற்சிக்கு பின் வேங்கைபுலிகளை இடம் மாற்றும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிப்ரவரி 18ம் தேதி கூடுதலாக 12 வேங்கைப்புலிகள், பிப்ரவரி 18ம் தேதி கொண்டுவரப்பட்டன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.