Robbery: கொள்ளையடிப்பது எப்படி? வீடியோவில் விளக்கிய திருடர்கள் - கடுப்பான காவல்துறை
கொள்ளையடிக்கும் சம்பவங்களை காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட இரண்டு கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தியாவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குற்றங்களைக் குறைப்பதற்காகக் கடுமையான தண்டனைகள் இருந்தாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. திருடுவது மட்டுமல்லாமல் வீடு புகுந்து கொலை செய்துவிட்டு வீட்டையே கொள்ளை அடித்துச் செல்கின்றனர் சில கும்பல்.
கொடூரமான கொலை சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்கள் சில வேடிக்கையான விஷயங்களையும் அவ்வப்போது செய்கின்றனர். அதுபோல மோசமான கொள்ளையர்கள் இருவர் தாங்கள் கொள்ளையடிக்கும் முறையை சமூக வலைத்தளங்களில் வீடியோவாக பதிவிட்டுள்ளனர். இது டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த இரண்டு கொள்ளையர்களை டெல்லி காவல்துறையினர் சமீபத்தில் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இந்த இரண்டு கொள்ளையர்களும் தாங்கள் கொள்ளையடித்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து அவற்றை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தனர்.
இவ்வாறு வீடியோக்களை வெளியிடுவதன் மூலம் அதிக இளைஞர்களை தங்களுடன் இணைத்துக் கொள்ள இந்த கொள்ளையர்கள் திட்டமிட்டுள்ளனர். 23 வயதான பண்டி மற்றும் 22 வயதான ராகுல் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போலத் திருட்டு சம்பவங்களில் ஈடுபடச் சென்ற போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரண்டு கொள்ளையர்களும் முகுந்த்பூர் மற்றும் ஸ்வரூப் நகர் ஆகிய எல்லைப் பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த இரண்டு கொள்ளையர்களிடமும் நான்கு துப்பாக்கிகள் இருந்துள்ளன.
மேலும் அதிக எண்ணிக்கையிலான தோட்டாக்களும் இருந்துள்ளன. இவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அதிக கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இவர்கள் இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வீடு புகுந்து கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல் நகை பறிப்பு போன்ற திருட்டு சம்பவங்களிலும் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கொலை சம்பவங்களை வீடியோவாக பதிவிட்டு அதன்மூலம் ஆட்களைச் சேர்க்க முயற்சித்த இந்த கொள்ளையர்களின் செயல் பலர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil

டாபிக்ஸ்