தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Two Killed As Train Hits Them In Jharkhand Jamtara District

Train Accident: ஜார்க்கண்டில் ரயில் மோதி கோர விபத்து - 2 பேர் பலி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Feb 28, 2024 10:40 PM IST

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த கோர ரயில் விபத்தில் 2 பேர் உயிரிழந்ததுள்ளனர். 12 பேர் வரை பலியாகியிருக்ககூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

ஜார்க்கண்டில் நடந்த ரயில் விபத்தில் இருவர் பலி
ஜார்க்கண்டில் நடந்த ரயில் விபத்தில் இருவர் பலி

ட்ரெண்டிங் செய்திகள்

தற்போது வரை இரண்டு பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஜம்தாரா துணைப்பிரிவி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து சம்பவம் மாலை 7 மணிக்கு நடந்திருப்பதாக கூறப்படுகிறது. ரயில் வண்டி எண் 12254, அங்கா எக்ஸ்பிரஸ், வித்யாசகரில் இருந்து கசிதார் செல்லும் வழியில் அபாய சங்கிலி இழுத்ததன் காரணமாக நிறுத்தப்பட்டது. அதிலிருந்து இறங்கிய நபர்கள் மற்றொரு தண்டவாளத்தை கடந்து சென்றபோதி அதில் வந்த ரயில் மோதி சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த மூன்று பேர் குழு அமைக்கப்பட்டிருப்பதாக ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விபத்து குறித்து கேள்விப்பட்டு ஜம்தாரா தொகுதி எம்எல்ஏ இர்பான் அன்சாரி நேரில் சென்று, விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்க வேண்டிய உதவிகளை செய்து வருகிறார்.

விபத்து குறித்து அவர் கூறியதாவது: " ரயில் விபத்து தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்துள்ளேன்.மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்