தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Two Kidnappers Arrested In Punjab As They Tried To Kidnap Educationalist Son

Crime: சிறுவனை கடத்தும் முயற்சி தோல்வி! மனதளராமல் பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 13, 2024 05:41 PM IST

பிரபல கல்வியாளரின் மகனை கடத்த முயற்சித்து, அவரது தந்தையிடம் கேங்ஸ்டர் போல் பேசி ரூ. 3 கோடி பணம் கேட்டு மிரட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சிறுவனை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது
சிறுவனை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவர் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர். இதைத்தொடர்ந்து கடத்தலில் ஈடுபட முயற்சித்ததாக தாண்டா பகுதியை சேர்ந்த மன்ப்ரீத் நக்ரா, அனில் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பாக மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் சுரேந்தர் லம்பா கூறியதாவது: " கடத்தலில் ஈடுபடுவதற்காக சமூக வலைத்தளங்களில் பல்வேறு விடியோக்களை பார்த்துள்ளனர். அதன்படி மேற்கொண்ட முயற்சியில் சிறுவன் தப்பித்துள்ளான்.

ஆனாலும் மனம் தளராத அவர்கள் தாண்டாவில் உள்ள கல்வியாளரின் தந்தைக்கு சர்வதேச சிம் கார்டை பயன்படுத்தி தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது மகனை உயிருடன் பார்க்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் தந்தையின் புகாரையடுத்து விசாரணை மேற்கொண்டு இருவரை கைது செய்துள்ளோம்" என்றார்.

கைதான இருவர் மீதும் இதற்கு முன்னர் எவ்வித குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை. தாண்டா நகரில் மற்றொரு வழக்கு தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சல்லான் என்ற பகுதியில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரு குழுக்களுக்கு இடையிலான மோதலில் இளைஞர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்