HMPV வைரஸ்: கர்நாடகாவில் 2 குழந்தைகளுக்கு தொற்று உறுதி எதிரொலி -அனைவரும் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.

கர்நாடகாவில் இரண்டு குழந்தைகளுக்கு எச்எம்பிவி தொற்று உறுதியான நிலையில், கர்நாடகத்தில் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவில் பரவி வரும் வைரஸ் தற்போது பெங்களூரில் அடியெடுத்து வைத்துள்ளது. மாநில சுகாதாரத் துறை பதற்றம் அடைய தேவையில்லை என தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துறை ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) திங்களன்று, கர்நாடகாவில் இரண்டு ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV) நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் சுவாச நோய்களைக் கண்காணிப்பதற்கான ICMR இன் வழக்கமான கண்காணிப்பு மூலம் இந்த நோய்கள் கண்டறியப்பட்டுள்ளன, சுவாச நோய்களைக் கண்காணிப்பதற்கான அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு இணங்க, மத்திய சுகாதார அமைச்சகம் திங்களன்று தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் உள்ள பாப்டிஸ்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று மாத பெண் குழந்தைக்கு HMPV தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு மூச்சுக்குழாய் அழற்சி இருந்ததாகவும், தற்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.