தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Two Held In Human Sacrifice Of Elderly Man And New Born In Kerala

Human Sacrifice: கேரளாவில் இரட்டை நரபலி..திருட்டு வழக்கில் கைதான இளைஞர் அளித்த அதிர்ச்சித் தகவல்கள்!

Karthikeyan S HT Tamil
Mar 12, 2024 09:26 AM IST

Kerala Human Sacrifice கேரளாவில் பணம் தங்கம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேரை நரபலி கொடுத்தாக திருட்டு வழக்கு ஒன்றில் கைது செய்யட்ட இளைஞர் ஒருவர் பரப்பரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்..

கைது செய்யப்பட்டுள்ள நிதிஷ் மற்றும் விஷ்ணு.
கைது செய்யப்பட்டுள்ள நிதிஷ் மற்றும் விஷ்ணு.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனை தொடர்ந்து இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் அடிப்படையில் இருவரிடமும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டதில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது.

விஷ்ணுவும் அவரது நண்பர் நிதிஷ்சும் சேர்ந்து சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என திட்டமிட்டுள்ளனர். இதற்காக பச்சிளம் குழந்தை ஒன்றை நரபலி கொடுக்க முடிவு செய்தனர். நரபலிக்காக விஷ்ணுவின் சகோதிரி குழந்தையை பலிகொடுக்க தீர்மானித்து, இதனை பற்றி விஷ்ணு தனது தந்தை விஜயன் தாய் சுமா மற்றும் சகோதிரியிடம் கூறியுள்ளார். இதற்கு குடும்பந்தினரும் ஒப்புக்கொண்டர்.

மேலும், விஷ்ணுவின் சகோதிரிக்கு கல்லூரியில் ஏற்பட்ட தகாத உறவால் பிறந்த குழந்தை என்பதால் இச்செயலை செய்வதற்க்கு குடும்பத்தினர் அஞ்சவில்லை என்றும் கூறப்படுகிறது. அதுமட்டும் இன்றி விஷ்ணுவும் அவரது குடும்பந்தினர் இணைந்து கர்ப்பம் தரித்த சம்பவத்தையோ குழந்தை பிறந்த சம்பவத்தையோ அக்கம் பக்கதினருக்கு தெரியாமலும் சந்தேகம் வரமாலும் பார்த்துக்கொண்டனர். இதனையடுத்தே பச்சிளம் குழந்தையை குடும்பந்தினர் நரபலி கொடுத்துள்ளனர்.

இச்சம்பவத்திற்க்கு பிறகு குடியிருந்த விட்டை விற்பனை செய்துவிட்டு விஷ்ணுவின் குடும்பத்தினர் வேறொரு இடத்திற்கு சென்றுவிட்டனர். திடீரென விஷ்ணுவின் தந்தையும் காணமல் போனார். அக்கம் பக்கத்தினர் விஷ்ணு மற்றும் அவரது தாயாரிடம் இதனை பற்றி விசாரித்தால் அவர்கள் யாரிடமும் முறையாக பதில் வழங்குவதில்லை என்றும் விட்டை விட்டு வெளியே வருவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிதிஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில் விஷ்ணுவுக்கும் அவரது தந்தை விஜயனுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகவும் அப்பொழுது நிதிஷும் விஷ்ணுவும் இணைந்து விஜயனை கொலை செய்து தற்பொழுது தங்கியுள்ள வீட்டில் வைத்தே புதைத்தாகவும் பின்பு வீட்டில் மாந்தீரீக பூஜைகளையும் செய்ததாகவும் நிதிஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனிடையே விஷ்ணுவின் தந்தையின் உடல் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டினர். ஆனால் சில எழும்புகள் மட்டுமே கிடைக்கப்பெற்றது. இதனை கைப்பற்றிய காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட சில உடல்பாகங்களை பிரதே பரிசோதனைகாக அனுப்பி வைத்துள்ளனர்

இதற்கிடையே குழந்தையின் உடல் புதைக்கப்பட்ட வீட்டின் மாட்டுத்தொழவத்தின் இடத்திலிருந்து உடலை தோண்டி எடுக்கும் பணிகளில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இக்குற்ற சம்வபத்தில் ஈடுப்பட்ட விஷ்ணு திருட்டு வழக்கில் கைது செய்ய முற்ப்பட்டபோது தப்பிக்க முயன்றபோது காலில் காயம் ஏற்பட்டுத்தால் மருவத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார். அவரையும் விரைவில் காவலில் எடுத்து விசாரித்தால் மேலும் கூடுதலாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம் என்றும் சொல்லப்படுகிறது. விஷ்ணுவின் தாய் சுமா மற்றும் அவரது சகோதரி ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் விசாரணை வளையத்திற்க்குள் கொண்டுவந்துள்ளனர்

கேரளாவில் ஆடம்பர வாழ்க்கை ஆசைப்பட்டு ஒரு பச்சிளம் குழந்தை உட்பட இரண்டு பேர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்