Twitter Share : ‘அம்மாவின் அலமாரியில் இருந்த ஆணுறை’ – டிவிட்டரில் பகிர்ந்த மகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Twitter Share : ‘அம்மாவின் அலமாரியில் இருந்த ஆணுறை’ – டிவிட்டரில் பகிர்ந்த மகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

Twitter Share : ‘அம்மாவின் அலமாரியில் இருந்த ஆணுறை’ – டிவிட்டரில் பகிர்ந்த மகளை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.

Priyadarshini R HT Tamil
Jul 11, 2023 09:30 AM IST

Twitter Share : ‘உங்கள் தாயின் தனிப்பட்ட விவகாரங்களில் நுழைவதே தவறு. அதை இப்படி புகைப்படம் எடுத்து ட்வீட் போடலாமா’ என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். உச்சகட்டமாக ‘உன்னை போன்ற குழந்தை வேண்டாம் என்று தான் தாய் இதை வைத்திருக்கிறார்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி பதிவிட்டுள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

மேலும் சமூக வலைதள பயன்பாடுகளால் ஏற்படும் பிரச்னைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. ஏனெனில் சமூக வலைதளங்கள் என்ற ஒன்று வந்த பின்னர் மக்கள் தங்களுக்கென்று பிரைவசி ஏற்படுத்திக்கொள்ளவில்லை. அதில் எதைவேண்டுமானாலும் போட்டு பிரபலமாகிவிட நினைக்கிறார்கள்.

இந்தநிலையில்தான் இந்தப்பெண் செய்த காரியத்தை பார்த்தால் சிலருக்கு முகச்சுளிப்புடன், கோவத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது.

 

நிகோலா என்ற பெண் தனது தாய் குறித்து போட்ட பதிவு இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இளைய தலைமுறையினர் எங்கள் பிரைவசியில் தலையிடக் கூடாது என்ற தெளிவான வாதத்தை முன்வைத்து பேசும் நிலையில், இந்த பெண்ணோ தனது தாயின் பிரைவசியை ஊடுருவி சென்று அதை ட்விட்டரில் பகீரங்கப்படுத்தியுள்ளார். அதனால் நெட்டிசன்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டார்.

'Nicola' என்ற ட்விட்டர் வாசி தான் தனது ட்வீட் பதிவு ஒன்றில் டியூரெக்ஸ் ஆணுறை டப்பா புகைப்படத்தின் பதிவை போட்டுள்ளார். ‘எனது தயாரின் அலமாரியில் நானும், எனது அண்ணனும் பார்த்தபோது இது கிடைத்து’ என்று கூறி எமோஜிக்களை போட்டு இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்த ட்வீட் ஜூலை 7ம் தேதி பகிரப்பட்ட நிலையில், இதுவரை 36 லட்சம் பேர் இந்த பதிவை பார்த்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெட்ண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

இந்த ட்வீட் கவனம் பெற்று வைரலாகும் நிலையில், அந்த பெண்ணை சிலர் விமர்சித்து கமெண்ட் போட்டு வருகின்றனர். ‘நீங்கள் மகளாகவே இருந்தாலும் இதுபோன்று செய்வது எல்லை மீறும் நடவடிக்கை’ என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.

‘உங்கள் தாயின் தனிப்பட்ட விவகாரங்களில் நுழைவதே தவறு. அதை இப்படி புகைப்படம் எடுத்து ட்வீட் போடலாமா’ என்று ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். உச்சகட்டமாக ‘உன்னை போன்ற குழந்தை வேண்டாம் என்று தான் தாய் இதை வைத்திருக்கிறார்’ என்று ஒரு டிவிட்டர் பயனாளி பதிவிட்டுள்ளார்.

‘ஆமாம் உன் தாயின் அலமாரியில் உனக்கு என்ன வேலை’ என்று ஒருவர் காட்டமாக திட்டியுள்ளார். ’20 ஆண்டுகளுக்கு முன் அவர் செய்த தவறை மீண்டும் செய்துவிடக்கூடாது என்பதற்காக வைத்திருக்கிறார்’ என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘அவர்களின் வாழ்க்கைய அவர் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘உன் தாய் மகிழ்ச்சியாக இருப்பதற்கு நீ ஏன் அழுகிறாய்?’ என்று ஒருவர் டிவீட் செய்துள்ளார்.

மீண்டும், மீண்டும் உன்னைப்போல் ஒரு குழந்தையை பெற அவர்கள் விரும்பவில்லை என்ற கமெண்ட்களையே பலரும் தெரிவித்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.