Apache: 50 லட்சத்தை தொட்ட அப்பாச்சி பைக் விற்பனை! டிவிஎஸ் நிறுவனம் புதிய சாதனை!
டிவிஎஸ் மோட்டார் ஜனவரி மாதத்தில் 2,75,115 பைக்குகளை யூனிட்களை விற்பனை செய்து உள்நாட்டு சந்தையில் அதன் விற்பனையில் 3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

சென்னையை தலைமை இடமாக கொண்டு 60க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது தயாரிப்புகளை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு முதல் டிவிஎஸ் அப்பாச்சி ரக பைக்குகளை அந்நிறுவனம் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது. டிவிஎஸ் அப்பாச்சி பிராண்டானது உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது.
இந்த நிலையில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் இதுவரை 50 லட்சம் அப்பாச்சி பைக்குகளை விற்பனை செய்ததற்கான சாதனையை டிவிஎஸ் நிறுவனம் தொட உள்ளது.
டிவிஎஸ் அப்பாச்சி பைக் சீரிஸ் பல ஆண்டுகளாக பல்வேறு மாற்றங்கள் மற்றும் அப்டேட்டுகளுக்கு உட்படுத்தப்பட்டு காலத்திற்கு ஏற்றார்போல் புதிய அம்சங்களுடன் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ரேஸ்-ட்யூன்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன் (ஆர்டி-ஃபை), ரைடு மோடுகள், டூயல் சேனல் ஏபிஎஸ், ரேஸ் ட்யூன்ட் ஸ்லிப்பர் கிளட்ச் போன்ற அம்சங்களை அப்பாச்சி பைக் கொண்டுள்ளது.
50 லட்சம் விற்பனையை தொட உள்ளது குறித்து கருத்து தெரிவித்துள்ள TVS மோட்டார் நிறுவனத் தலைவர் விமல் சும்ப்லி கூறுகையில், “இந்த உலகளாவிய மைல்கல்லை எட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் இந்த சாதனைக்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து அப்பாச்சியர்களுக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
TVS அப்பாச்சி ஒரு மோட்டார் சைக்கிளில் இருந்து முழு பிரீமியம் அனுபவத்திற்கு நீண்ட தூரம் கட்நது வந்துள்ளது, டிவிஎஸ் அப்பாச்சி சீரிஸ் அதன் சிறந்த செயல்திறன், தொழில்நுட்பம் மற்றும் ஸ்டைல் மூலம் பிரீமியம் மோட்டார்சைக்கிள் பிரிவில் புதிய வரையறைகளை அமைத்து வருகிறது என தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்போர்ட்ஸ் பிரிவில் கடந்த 2017ஆம் ஆண்டு Apache RR 310 (ரேஸ் ரெப்ளிகா) வகை பைக் அறிமுகப்படுத்தப்பட்டது. 2021 ஆம் ஆண்டில், நிறுவனம் Apache RR310க்கான 'பில்ட் டு ஆர்டர்' தளத்தையும் அறிமுகப்படுத்தியது. டிவிஎஸ் மோட்டார் ஜனவரி மாதத்தில் 2,75,115 பைக்குகளை யூனிட்களை விற்பனை செய்து உள்நாட்டு சந்தையில் அதன் விற்பனையில் 3 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்நிறுவனம் 2,66,788 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டாபிக்ஸ்