தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Trains Collide In Indonesia's Java Island And 3 Killed

Indonesia: இந்தோனேசியாவின் ஜாவா தீவில் ரயில்கள் மோதி விபத்து: 3 பேர் பலி

Marimuthu M HT Tamil
Jan 05, 2024 12:10 PM IST

மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங், சிகாலெங்கா என்ற இடத்தில் துரங்கா ரயில் மீது பாண்டுங் ராயா உள்ளூர் ரயில் மோதியது. (ராய்ட்டர்ஸ்)
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் உள்ள பாண்டுங், சிகாலெங்கா என்ற இடத்தில் துரங்கா ரயில் மீது பாண்டுங் ராயா உள்ளூர் ரயில் மோதியது. (ராய்ட்டர்ஸ்)

ட்ரெண்டிங் செய்திகள்

மேற்கு ஜாவாவின் பாண்டுங் நகரில் உள்ள சிகலெங்கா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், இந்த விபத்து நிகழ்ந்ததாக இந்தோனேசியாவின் செய்தித் தொடர்பாளர் அயிப் ஹனாபி தெரிவித்தார்.

கிழக்கு ஜாவா மாகாணத்தின் தலைநகரான சுரபயாவிலிருந்து பாண்டுங் நோக்கிச் சென்ற துரங்கா விரைவு ரயில், சிகலெங்கா நிலையத்திலிருந்து படாலராங் நோக்கிச் சென்ற பயணிகள் ரயில் மீது மோதியது என்று அந்த அதிகாரி கூறினார்.

குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று மேற்கு ஜாவா காவல்துறை செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் டோம்போ தெரிவித்தார்.

நமக்குக் கிடைத்த வீடியோவில் ரயிலின் பல பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தன. ஒரு பெட்டி, அருகில் இருந்த நெல் வயலில் கவிழ்ந்தது. பீதியடைந்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்க முயன்றதால் மக்கள் அலறினர். காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் எடுத்துச் சென்றனர்.

பயணிகள் ரயிலில் சுமார் 106 பயணிகளும், துரங்காவில் 54 பயணிகளும் மீட்கப்பட்டுள்ளனர் என்று பாண்டுங்கின் தேடல் மற்றும் மீட்பு முகமையின் தலைவர் ஹெரி மரந்திகா கூறினார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தோனேசியாவில் பழைய ரயில் பாதைகள் அதிகமுள்ளன. குறிப்பாக, வயல்வெளிக்கு இடையிலான விபத்துக்கள் சாதாரணமானவை என்பது குறிப்பிடத்தக்கது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்