Top 10 News (26.05.2023) : நாடாளுமன்ற கட்டிட திறப்பு வழக்கு - இன்று அவசர விசாரணை; தமிழகத்தில் பள்ளிகள் எப்போது?
Top 10 News (26.05.2023) : உள்ளூர் முதல் உலகம் வரை, தேசம் முதல் விளையாட்டு வரை இன்றைய முக்கிய செய்திகள் என்ன?
தேசம்
ரூ.140 கோடிக்கு ஏலம் பேன திப்பு சுல்தான் வாள்!
மைசூர் புலி என்றழைக்கப்பட்ட திப்பு சுல்தானின் வாள் ரூ.140 கோடிக்கும் ஏலத்தில் விடப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள கலைப்பொருட்களை ஏலம் விடும் போன்ஹாம்ஸ் என்ற நிறுவனம் நடத்தியி இந்த ஏலத்தில், நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளது.
அப்டேட்பளை அள்ளிக்கொடுக்கிறது வாட்ஸ் அப்
டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போல் வாட்ஸ் அப் செயலியிலும் 'User Name' முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது வாட்ஸ் அப் பயனாளர்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண் கட்டாயம் தேவைப்படும் நிலையில், பயனர்களின் தனித்தன்மையை பாதுகாக்கும் வகையில் இந்த அப்டேட் என டெக்னாலஜி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடாளுமன்றத்தில் புதிய கட்டிடத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திறக்க உத்தரவிடக்கோரிய வழக்கை அவசர வழக்காக இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்.
நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் இன்று நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நாட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்படுகிறது. இம்ரானின் கைதை கண்டித்து நடந்த வன்முறை தொடர்பான வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் போர்க்க்ப்பலில் வெற்றிகராமக தரையிறங்கி சாதித்தது மிக் 29 ரக போர் விமானம். கடற்படையின் முயற்சியை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார். சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் சென்றார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். டோக்கியோ மற்றும் ஒசாகாவில் தொழில் துறையினரை சந்தித்து பேசுகிறார்.
தமிழகம்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளிப்போகிறதா? - இன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் பட்டியலை தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்தே பெற்றுக்கொள்ளலாம் என்று தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம். பிற்பகல் முதல் பணிகள் துவங்குகின்றன.
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. இன்று முதல் 8 நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐல்லிக்கட்டுக்கான சட்டமும், நடைமுறைகளும் மஞ்சுவிரட்டுக்கும் பொருந்துமா? தமிழக அரசு பதலிளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருவாரூர் கமலாலய குளத்தில் விமரிசையாக துவங்கியது தெப்ப திருவிழா. மின்னொளியில் பவனி வந்த தெப்பத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கினர்.
நகைக்கடைகளில் ரூ.2000 நோட்டுக்களை மாற்றும் மக்கள். கடந்த சில நாட்களில் தங்க நகைகள் வாங்குவது அதிகரித்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகி உள்ளது.
நாகை அருகே அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த பெண்ணிடம் ஹிஜாபை அகற்றிக்கோரி பாஜக நிர்வாகி தகராறு செய்தார். உரிய நடவடிக்கை கோரி அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தீட்ஷிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை எனக்கூறிய தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய நிலைப்பாட்டில் திடீர் மாற்றம். 24 மணி நேரத்திற்கு இரண்டு கருத்துக்களை தெரிவித்துள்ளது.
அவினாசி அருகே ரூ.2,000 நோட்டுக்களை மாற்றித்தர 10 சதவீத கமிஷன் தருவதாக கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த அதிமுக ஒன்றிய செயலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்ட்டுள்ளனர்.
வானிலை
அந்தியூர் அருகே தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தை தணித்தது கனமழை.
தமிழ்நாட்டில் 17 நகரங்களில் வெயில் சதம் அடித்ததால் மக்கள் அவதிப்படுகின்றனர். அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
விளையாட்டு
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போவது யார்? இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் மும்பை - குஜராத் அணிகள் இன்று பலப்பரிட்சை செய்கின்றன.
முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!
புழல் ஏரியில் நீர்இருப்பு 2301 மில்லியன் கனஅடியாக உள்ளது; 159 கனஅடி நீர் வெளியேற்றம்
சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 717 மில்லியன் கனஅடியாக உள்ளது
கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 462 மில்லியன் கனஅடியாக உள்ளது