தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  Today Trending News National And World August 13

நுபுர் சர்மா விவகாரம்,குரங்கம்மை தொற்று உள்பட முக்கிய செய்திகள் (ஆக 13)

Divya Sekar HT Tamil
Aug 13, 2022 05:44 PM IST

நுபுர் சர்மா விவகாரம்,குரங்கம்மை தொற்று உள்பட பல்வேறு முக்கிய செய்திகளை சுருக்கமாக காண்போம்.

குரங்கம்மை
குரங்கம்மை

ட்ரெண்டிங் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தின் யமுனை ஆற்றில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடகாவில் மறுபிறவி குறித்த நம்பிக்கையில் பிரபல அருந்ததி திரைப்படத்தை போன்று தனக்கு தானே நெருப்பை வைத்துக்கொண்டு 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார்

பீகாரின் சரண் மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்திய 7 பேர் உயிரிழந்தனர்

ராணுவ துப்பாக்கியை பயன்படுத்தியது தொடர்பாக இணையத்தில் வீடியோ வெளி வந்த நிலையில், அதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியில் 22 வயதான இளம்பெண் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு மொத்த பாதிப்பு 5 ஆக அதிகரித்துள்ளது.

தேசிய கொடி ஏற்றாத வீடுகளை கண்காணித்து தனக்கு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என உத்ரகாண்ட் மாநில பாஜக தலைவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சாலை விபத்தில் இறந்துபோன சகோதரிக்கு சிலை வைத்து ஆந்திராவில் ரக்ஷா பந்தன் பண்டிகையை சகோதர, சகோதரிகள் கொண்டாடினர்.

காசோலை மோசடி வழக்கில் நடிகை ஜீவிதா ராஜசேகர் ஆந்திர மாநிலம், நகரி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

தமிழகம், புதுச்சேரியில் சட்டத்துறையில் பெரும் சாதனை படைத்த பேராசிரியர் கு.சிவமணி (90) புதுச்சேரியில் நேற்று காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை கருவடிக்குப்பத்தில் நடக்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்