தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Hbd Nitin Jairam Gadkari: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிறந்த நாள் இன்று

HBD Nitin Jairam Gadkari: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிறந்த நாள் இன்று

Pandeeswari Gurusamy HT Tamil
May 27, 2023 06:40 AM IST

கல்லூரி நாட்களில் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டவே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) உறுப்பினரானார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

ட்ரெண்டிங் செய்திகள்

பிறப்பு

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் 1957 மே 27 அன்று பிறந்தார் நிதின் கட்கரி. ஜெய்ராம் கட்கரி மற்றும் பானுதாய் கட்கரி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். நிதின் கட்கரிக்கு சுனில் மற்றும் அசோக் என்ற இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர், நாக்பூரில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் பட்டப்படிப்பை முடித்த அவர், நாக்பூரில் உள்ள DAV கல்லூரியில் வணிக மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றார். கல்லூரி நாட்களில் அரசியலில் ஆர்வம் ஏற்பட்டவே ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் (ஏபிவிபி) உறுப்பினரானார். இதையடுத்து அவர் காஞ்சன் கட்கரியை மணந்தார். தம்பதியருக்கு நிகில், சாரங் என இரண்டு மகன்களும், கேதகி என்ற மகளும் உள்ளனர்

அரசியல் வாழ்க்கை

கடந்த 1980 இல் மகாராஷ்டிராவில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா (BJYM) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நிதின் கட்கரி. அவர் 1989 ஆம் ஆண்டு மகாராஷ்டிர சட்ட மேலவை உறுப்பினரானார். இதைத்தொடர்ந்து 1995 ஆம் ஆண்டு சிவசேனா-பாஜக அரசாங்கத்தில் பொதுப்பணித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அந்த நாட்களில் அமைச்சரவையின் இளம் அமைச்சராக நிதின் கட்கரி இருந்தார்.

2005 ஆம் ஆண்டில், நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநில பிஜேபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் 2009 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றியைப் பெற்றார். பின்னர் 2010 இல், அவர் பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியில் முக்கியப் பங்காற்றினார் நிதின் கட்கரி. 2019 இல், நரேந்திர மோடி அரசாங்கத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நிதின் கட்கரியின் சாதனைகள்

இந்தியாவின் சாலை மற்றும் போக்குவரத்து துறையை மாற்றியமைப்பதில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார். ஒரு நாளைக்கு 40 கிமீ நெடுஞ்சாலைகளை அமைக்க இலக்கு நிர்ணயித்துள்ளார், மேலும் அவரது முயற்சியின் விளைவாக 2020 இல் மட்டும் 13,000 கிமீ நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் நீர்வழிப் பாதைகளை மாற்றுப் போக்குவரத்து முறையாக மேம்படுத்துவதற்கு நிதின் கட்கரி பணியாற்றினார். இந்தியா முழுவதும் 111 நீர்வழிப் பாதைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தேசிய நீர்வழித் திட்டத்தின் வளர்ச்சியை அவர் மேற்பார்வையிட்டுள்ளார்.

மின்சார வாகனங்களின் ஊக்குவிப்பு: நிதின் கட்காரி மின்சார வாகனங்களுக்கு குரல் கொடுப்பவர் மற்றும் இந்தியாவில் அவற்றின் பயன்பாட்டை தீவிரமாக ஊக்குவித்து வருகிறார். 2030ஆம் ஆண்டுக்குள் 30% மின்சார இயக்கத்தை எட்ட இலக்கு நிர்ணயித்துள்ளார்.

நிதின் கட்கரி இந்தியாவில் தொழில் முனைவோர் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறார். ஸ்டார்ட்அப்களை ஊக்குவிப்பதற்காக அவர் பல திட்டங்களைத் தொடங்கியுள்ளார் மற்றும் புதுமையான யோசனைகளைக் கொண்டு வர இளம் தொழில்முனைவோரை ஊக்கப்படுத்தினார்.

இந்தியாவில் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த நிதின் கட்கரி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். நிதின் கட்கரி தொழில்முனைவு மற்றும் ஸ்டார்ட்அப்களுக்காக பணியாற்றினார். 2016 ஆம் ஆண்டில், கட்கரி ஸ்டார்ட்-அப் இந்தியா முயற்சியைத் தொடங்கினார்.

இந்தியாவில் உற்பத்தி மற்றும் தொழில்முனைவோரை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேக் இன் இந்தியா முயற்சிக்கு கட்காரி வலுவான ஆதரவாளராகவும் இருந்து வருகிறார்.

இன்று பாஜகவின் முக்கிய முகமாக கருதப்படும் நிதின் கட்கரி இன்று 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளான இன்று அவர் குறித்த முக்கிய தகவல்களை இந்துஸ்தான் டைம்ஸ் பகிர்ந்து கொள்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்