Syama Prasad Mukherjee: ‘ஆர்.எஸ்.எஸ் முன்னோடி சியாம பிரசாத் முகர்ஜி’ பிறந்த நாள் இன்று
1950ல் லியாகத்-நேரு ஒப்பந்தம் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையில் ஏப்ரல் 6ல் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகினார். இது மேற்கு வங்கத் மக்களின் நாயகனாக அவரை மாற்றியது.

ஆர்.எஸ்.எஸ்.முன்னோடி, கல்வியாளர், வழக்கறிஞர் என பன்முகத் தன்மை கொண்ட சியாம பிரசாத் முகர்ஜி பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.
சியாம பிரசாத் முகர்ஜி-பிறப்பு
மேற்கு வங்க மாநில தலைநகர் கல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதியரசரும், கொல்கத்தா பல்கலைக்கழக துணை வேந்தருமான சர் அசுதோசு முகர்ஜி - ஜோகமாயா தம்பதியினருக்கு மகனாக கடந்த1901ஆண்டு ஜூலை 6ந்தேதி பிறந்தார்.
இவர் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழியிலும், வங்க மொழியிலும் பட்டம் பெற்றார். 1926ல் இங்கிலாந்து சென்று சட்டம் பயின்றார். 1927ல் பாரிஸ்டர் பட்டம் பெற்றார். 33 வயதில் 1934 முதல் 38 வரை கல்கத்தா பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றினார்.
இவர் சுதா தேவி என்ற பெண்ணை மணந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் பிறந்தனர். அதே சமயம் சுதா தேவி உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளவில்லை.
அரசியல்
சியாம பிரசாத் முகர்ஜி 1929ல் மேற்கு வங்க மாகாண சட்ட மேலவைக்கு கல்கத்தா பல்கலை சார்பில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே கட்சியில் இருந்து விலகி சட்டமன்ற தேர்தலில் தனித்து நின்று வெற்றி பெற்றார். விடுதலைக்கும் முன் 1941-42 ல் நிதி அமைச்சராக இருந்தார்.
பின்னாளில் இந்து மகாசபையில் இணைந்தவர் 1944ல் இந்து மகாசபையின் தலைவரானார்.
மேற்கு வங்க நாயகன் சியாம பிரசாத் முகர்ஜி
விடுதலைக்கு பின் நேருவின் தலைமையிலான இடைக்கால அரசில் வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சரானார்.
இதற்கிடையில் 1950ல் லியாகத்-நேரு ஒப்பந்தம் காரணமாக ஏற்பட்ட சர்ச்சையில் ஏப்ரல் 6ல் நேருவின் அமைச்சரவையிலிருந்து விலகினார். இது மேற்கு வங்கத் மக்களின் நாயகனாக அவரை மாற்றியது.
பாரதிய ஜன சங்கம்
1951 அக்டோபர் 21 ல் பாரதிய ஜன சங்கம் கட்சியை ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தின் தலைவர் எஸ். கோல்வால்கருடன் இணைந்து உருவாக்கினார். ஜன சங்கம் தொடங்கிய அடுத்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதில் ஒரு தொகுதியில் முகர்ஜி வெற்றி பெற்றார்.
காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு எதிர்ப்பு
சியாம பிரசாத் முகர்ஜி காஷ்மீருக்கான தனிக்கொடி, தனி சட்டம், தனி சின்னம் என்பதை கடுமையாக எதிர்த்தார். ஒரு நாட்டில் இரண்டு அரசியல் அமைப்பு சட்டமும், சின்னமும் இருக்க இயலாது என்று கடுமையாக வாதிட்டார்.
இதற்கிடையில் அடையாள அட்டை இன்றி காஷ்மீரில் நுழைந்த சியாம பிரகாஷ் முகர்ஜியை காவல்துறையினர் 11 மே 1953ல் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் 23 ஜூன் 1953ல் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக காவல் துறை அறிவித்தது. இந்நிலையில் சியாம பிரசாத் முகர்ஜியின் கைது நேருவின் சதித்திட்டம் என்று அடல் பிகாரி வாஜ்பாய் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்