Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

Marimuthu M HT Tamil
May 15, 2024 07:16 PM IST

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த ’உப்பு சத்தியாகிரகம்’ என்னும் விழிப்புணர்வு இயக்கத்தை மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. அவை நம்மிடம் இதுகுறித்து பகிர்ந்த பயனுள்ள தகவல்கள்!

Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்
Micro Labs: உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த - உப்பு சத்தியாகிரகம்! விழிப்புணர்வு இயக்கம் தொடங்கிய மைக்ரோ லேப்ஸ்

உயர் ரத்த அழுத்தத்திற்கு உப்பு முக்கியக் காரணம்:

உயர் ரத்த அழுத்தத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், நம் உணவு முறையில் அதிகம் இருக்கும் உப்பின் சேர்க்கை முக்கியப் பங்கு வகிக்கிறது. "இந்தியாவில் ஒருவர் தினசரி சராசரியாக 8 கிராம் உப்பு உட்கொள்கிறார். இது உலக சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கும் 5 கிராமுக்கும் அதிகம்" என்கிறார் Dr. மஞ்சுளா சுரேஷ், மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் மருத்துவ சேவைகள் மூத்த துணை தலைவர். உயர் ரத்த அழுத்தத்திற்கு அதிக உப்பு உட்கொள்ளல் ஒரு முக்கிய காரணி. இதைக் குறைப்பது கடினமானது அல்ல.

மைக்ரோ லேப்ஸ் "உப்பு சத்தியாகிரகம்" இயக்கத்தை தொடங்குகிறது:

இந்த பிரச்சனையை கையாளவும், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் "நான் உப்பு சத்தியாகிரஹத்தில் இருக்கிறேன்" (Iam on Salt Satyagraha) என்ற இயக்கத்தை மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தொடங்குகிறது. இது உயர் உப்பு உட்கொள்ளல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இடையே உள்ள தொடர்பை மக்களுக்கு எடுத்துரைக்கும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் முக்கியம்:

"உப்பு உட்கொள்ளலைக் குறைப்பது அவசியம் என்றாலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை உயர் ரத்த அழுத்தத்தை தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் முக்கியம்" என்கிறார் Dr. ரவி ஆர் காஸ்லிவால், மேதாந்தா, குருகிராமில் உள்ள இதய ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர். "வழக்கமான உடற்பயிற்சி, ஆரோக்கியமான எடை பராமரிப்பு, மன அழுத்தைக் குறைத்தல், பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த சீரான உணவு ஆகியவை இரத்த அழுத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்."

இந்தியாவில் உப்பு குறைப்புக்கான சிறந்த உத்திகள்:

"மேலும், இந்திய சூழலில் உப்பைக் குறைப்பதற்கான சிறந்த உத்திகளை உருவாக்க மருத்துவர்கள் குழு எங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்கிறார் மைக்ரோ லாப்ஸின் துணைத் தலைவர் ஸ்ரீரிஷ் சமக்

2025ஆம் ஆண்டிற்குள் 25% உயர் ரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்கும் இலக்கு:

அரசாங்கத்தின் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) இலக்குகளை அடைய அவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் மைக்ரோ லேப்ஸ் உறுதிபூண்டுள்ளது. 'நான் உப்பு சத்தியாகிரஹத்தில் இருக்கிறேன்' என்ற எங்கள் விழிப்புணர்வு இயக்கம், 2025ஆம் ஆண்டிற்குள் 25% உயர் ரத்த அழுத்த பாதிப்பைக் குறைக்கும் என்ற IHCI-ன் நோக்கத்துடன் இணைந்து செயல்படுகிறது. கட்டுப்படுத்தப்படாத உயர் ரத்த அழுத்தத்தின் ஆபத்துகள் மற்றும் உப்பு குறைப்பதின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவில் பொது சுகாதாரத்தை கணிசமாக மேம்படுத்த முடியும்" என்று மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CMD) திரு. திலீப் சுரானா கூறுகிறார்.

மே 17ஆம் தேதி உலக உயர் ரத்த அழுத்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

மேலும் தகவலுக்கு இந்த லிங்கினை கிளிக்கவும்: https://www.microlabsltd.com/ 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.