Crocodile Attack: திடீரென வந்த முதலை - பக்தர்கள் மாயம்
ஆற்றுக் கடக்க முயன்ற போது திடீரென முதலை தாக்க முயன்றதால் மூன்று பேர் உயிரிழந்தனர்.
விலங்குகளால் மனித உயிரிழப்புகள் என்பது அப்போது நடந்து வருவது வழக்கமான ஒன்று. ஆனால் மக்களுக்கு அச்சத்தை விளைவிக்கக் கூடிய உயிரினங்களின் தாக்குதலானது மோசமானதாகும். மனித உயிர்களைப் பலி வாங்கும் மோசமான உயிரினங்களில் முதலையும் ஒன்று.
ட்ரெண்டிங் செய்திகள்
அந்த வகையில் முதலையால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர், அதேபோல் ஐந்து பேர் மாயமாகி உள்ளனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ஷிவ்புரி மாவட்டத்தில் உள்ள சிலாபாத் கிராமத்தில் குஷ்வாகா சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள் என எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் இவர்கள் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்த சமூகத்தில் சில ஆண்கள் பெண்கள் கைலா தேவி கோயிலுக்குச் சுவாமி தரிசனம் செய்வதற்காகச் சென்று உள்ளனர். கோயிலுக்குச் செல்வதற்காக மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள மெரினா மாவட்டத்தில் அமைந்திருக்கும் சாம்பல் ஆற்றில் இறங்கி அதில் நடந்து சென்றுள்ளனர்.
அனைவரும் தடம் மாறாமல் இருக்க ஆதரவாக ஒருவருக்கொருவர் தங்களது கைகளைப் பிடித்தபடி தண்ணீரில் ரயில் போல் நடந்து சென்றுள்ளனர். இந்த ஆற்றில் முதலைகள் அதிகம் உள்ளன என ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் ஆட்சி கடந்து செல்லும் பொழுது திடீரென அங்கே வந்த ஒரு முதலை அவர்களைத் தாக்கியுள்ளது. இதனால் பதட்டம் அடைந்து பயந்து போன அவர்கள் நீரில் மூழ்கித் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஆற்றில் நீரோட்டம் அதிக அளவில் இருந்த காரணத்தினால் எட்டு பேர் அதில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மேலும் பயணம் செய்த ஒன்பது பேர் நீந்திக் தரையைச் சேர்ந்து விட்டனர். ஆற்றின் குறுக்கே பாலம் எதுவும் இல்லாத காரணத்தினால் வேறு வழியில்லாமல் கோயிலுக்கு ஆற்றில் இறங்கி அந்த மக்கள் சென்றுள்ளனர்.
காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் தேவகி நந்தன் என்ற ஆணையும், கல்லோ பாய் என்ற பெண்ணையும், பிறகு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் உடல்களை மீட்டுள்ளனர்.
இன்னும் ஐந்து பேர் உடல்கள் கிடைக்காத காரணத்தினால், அதனைத் தேடும் பணி தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. ஒருவேளை அவர்கள் நீரில் மூழ்கி உயிரை இழந்து இருக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.