Tamil News  /  Nation And-world  /  Three Arrested In Tripura With Heroin Concealed In Soapbox: Police

Crime: திரிபுராவில் போதை வியாபாரிகள் 3 பேரை மடக்கி பிடித்த போலீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 21, 2024 05:58 PM IST

சோப்பு பெட்டியில் வைத்து போதை பொருளான ஹெராயின் எடுத்து வந்து மூன்று பேரை திரிபுரா மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது
போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது

ட்ரெண்டிங் செய்திகள்

கைதானவர்களிடம் நடத்திய சோதனையில் சோப்புப் பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப்பொருள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

"வடக்கு திரிபுரா பகுதியில் நுழைந்த காரை வழிமறித்து சோதித்த போது அந்த காரில் வந்தவர்கள் சோப்பு பாக்ஸில் 12 கிராம் அளவில் ஹெராயின் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், ஹெராயின் வைத்திருவர்கள் ஷிகாப் உத்தின் (19), சுமன் உத்தின் (22), ரியாஸுல் உத்தின் (25) என தெரியவந்தது. இவர்கள் மூவரும் அஸ்ஸாம் மாநிலம் பத்ராகண்டி பகுதியை சேர்ந்தவர்கள்.

இவர்கள் மீது போதைப்பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தர்மனநகர் காவல் நிலைய அதிகாரி மும்தாஸ் ஹசினா கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்டிருக்கும் மூன்று பேரும் இளம் வயதினராக இருப்பதுடன் அவர்களிடன் ஹெராயின் எப்படி வந்தது, எதற்காக அவர்கள் திரிபுரா வந்தார்கள், இவர்களுக்கு போதை பொருளை சப்ளை செய்தது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்