Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!

Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!

Marimuthu M HT Tamil Published Jul 26, 2024 05:44 PM IST
Marimuthu M HT Tamil
Published Jul 26, 2024 05:44 PM IST

Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடனின் செயல் பலரையும் நகைப்புக்குள்ளாக்கியுள்ளது. தெலங்கானாவில் தான் இந்த குபீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!
Thief: உணவகத்தில் திருட எதுவுமில்லாதபோது, உரிமையாளருக்கு ரூ.20 வைத்துச் சென்ற திருடன்: தெலங்கானாவில் குபீர் சம்பவம்!

திருடச்சென்ற உணவகத்தில் எந்தவொரு பணமும் இல்லாததால், ஏமாற்றமடைந்த திருடன், கடையைவிட்டு வெளியேறுவதற்கு முன்பு மேஜையில் ரூ.20ஐ வைத்துவிட்டுச் சென்ற செயல் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. தற்போது அதன் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும், அவரை "நேர்மையான திருடன்" எனப் பாராட்டி, சோஷியல் மீடியாவில் கருத்து பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த வீடியோ, ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மகிழ்வித்துவருகிறது.

திருடன் செய்தது என்ன?; எங்கு அதைச் செய்தார்?:

தெலங்கானா மாநிலத்தின், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மகேஸ்வரம் என்னும் கிராமத்தில் உள்ள ஒரு உணவகத்துக்குள் இரவு திருடன் ஒருவன் நுழைந்து உள்ளான்.

உணவக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பணத்தை திருடும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட அடையாளம் தெரியாத நபர் நுழைந்ததாக டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் சமயம் தெலுங்கு செய்தி வலைத்தளமும் அதனை செய்திவெளியிட்டு உறுதிசெய்திருந்தது. மேலும் அந்த அடையாளம் தெரியாத நபர் ஒரு கம்பியைப் பயன்படுத்தி, நுழைவு வாயிலில் இருக்கும் பூட்டை உடைத்து, உள்ளே உணவகத்துக்குள் உள்ளே நுழைந்துள்ளார்.

அப்போது உணவகத்தை முழுமையாக சோதனையிட்ட அந்த அடையாளம் தெரியாத நபர் திருடுவதற்குப் பணம் மற்றும் மதிப்புமிக்கப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை என உணர்ந்த பின் சற்று டென்ஷன் ஆகியுள்ளார். பின், சிசிடிவி கேமராக்கள் அங்கிருப்பதை அறிந்த திருடன், தனது ஏமாற்றத்தை அதன் முன் வெளிப்படுத்தியிருக்கிறான். 

திருடன் செய்த தரமான சம்பவம்:

ஆன்லைனில் பகிரப்பட்ட அந்த காட்சியில், திருடன் தனது அடையாளத்தை கவனமாக மறைக்க கையுறைகள், தொப்பி மற்றும் முகமூடி அணிந்திருக்கிறார். மேலும், கண்காணிப்பு கேமராவைப் பார்த்து, வியாபாரம் ஏன் இவ்வளவு குறைந்துவிட்டது என்று சைகைகள் மூலம் கேள்விகள் பல கேட்கிறார்.

முற்றிலும் வெறுங்கையுடன் வெளியேறுவதற்குப் பதிலாக திருடன், சில குளிர்பானங்களை எடுத்துக்குடிக்கலாம் என நினைத்து, அங்கு இருக்கும் குளிர்பானங்களை எடுத்து குடிக்கிறான்.

 பின் குளிர்சாதனப்பெட்டி வைத்து இருக்கும் அறையை விட்டு வெளியேறும் முன், பானத்திற்கு பணம் கொடுப்பது போல, பர்ஸைத் திறந்து 20 ரூபாயை எடுத்து மேஜை மீது வைத்துவிட்டு கிளம்பினான்.

ஒரு திருடன்  ஒரு இடத்தில் திருட முயற்சித்து ஏழையாக வெளியேறிய முதல் கொள்ளை இதுவாக இருக்கலாம் என்று சில சமூக ஊடக பயனர்கள் நக்கல் அடித்தனர். 

சோசியல் மீடியாவில் கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்:

மேலும் ஒருவர்,"ஆஹா. ஒழுக்கம் கொண்ட திருடன்"என்று எழுதியிருக்கிறார். 

இன்னொருவர்,"அரசியல்வாதியாக இருந்திருந்தால் அந்த ஃப்ரிட்ஜையும் எடுத்துச் சென்றிருப்பார்" என்று நகைச்சுவையாகச் சொன்னார். பலர் கருத்துகள் தெரிவிக்கும் பிரிவில் சிரிக்கும் எமோஜிகளைப் பதிந்தனர்.

ஒரு திருடன் மனம் மாறுவது இது முதல் முறை அல்ல. இந்த மாத தொடக்கத்தில், இதுபோல் ஒரு திருடன் தான் திருடிய மதிப்புமிக்க பொருட்களை திருடப்பட்ட வீடு பிரபல மராத்தி எழுத்தாளருக்கு சொந்தமானது என்பதை உணர்ந்து, மும்பையில் அவர் திருடிய இடத்திலேயே வந்து மதிப்புமிக்க பொருட்களை வைத்துச் சென்றார். 

தமிழ்நாட்டில் மனம் திருந்தி திருடன் செய்த மதிப்புமிகு செயல்:

அதேபோல் சில மாதங்களுக்கு முன், தமிழ்நாட்டில் உசிலம்பட்டியில், காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டனின் வீட்டில் அவரது தேசிய விருதுகளையும், அவரது பரிசுத்தொகையையும் திருடிய திருடர்கள் அதனை அவர் வீடு என்று தெரிந்தபின், தேசிய விருது பழக்கங்களை அவரது வீட்டின் முன் போட்டுச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.