PM Modi : ‘ஜி20 வெற்றி இந்தியாவுக்கே உரியது.. தனி நபருக்கோ கட்சிக்கோ அல்ல’ - பிரதமர் மோடி!
ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது என்று மக்களவையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. பழைய நாடாளுமன்ற வளாகத்தின் இறுதி அமர்வு இன்று நடைபெறுவதாக சபாநாயர் ஓம்பிர்லா அறிவித்தார்.
இதன் பின்னர் மக்களவையில் பிரதமர் மோடி பேசுகையில், “இன்று நீங்கள் ஜி 20 வெற்றியை ஒருமனதாகப் பாராட்டியுள்ளீர்கள். நான் உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி 20 மாநாட்டின் வெற்றி 140 கோடி குடிமக்களின் வெற்றி. ஜி-20 வெற்றி என்பது எந்த ஒரு தனி நபர் அல்லது கட்சியின் வெற்றி அல்ல. இது நாம் அனைவரும் கொண்டாட வேண்டிய விஷயம்” என்று நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரின் முதல் நாள் மக்களவையில் உரையாற்றியபோது பிரதமர் மோடி கூறினார்.
மேலும் பேசிய அவர், "ஜி20 மாநாட்டால் இந்தியா குறித்த எதிர்மறை எண்ணம் மாற்றப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமைத்துவம் குறித்து எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் ஜி20 பதிலளித்துள்ளது. நாட்டின் பன்முக தன்மையை பறைசாற்றுகிறது நாடாளுமன்றம். அதிகளவிலான பெண்களின் பங்களிப்பு இந்த நாடாளுமன்றத்திற்கு பெருமை சேர்த்துள்ளது. அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய இடமாக நாடாளுமன்றம் இருக்கும்.
தனது உரையின் போது, சந்திரயான் 3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதையும் பிரதமர் மோடி பாராட்டினார். இன்று, எல்லா இந்தியர்களின் சாதனைகளும் எல்லா இடங்களிலும் பேசப்படுகிறது. சந்திரயான்-3-ன் வெற்றி இந்தியாவை மட்டுமல்ல, உலகையும் பெருமைப்படுத்தியுள்ளது.நிலவில் சிவசக்தி என்ற அந்த இடம் நமது உற்சாகத்தை அதிகப்படுத்தியுள்ளது.
தொழில் நுட்பம், அறிவியம், புது யுகத்துடன் இணைந்த புதிய பாதை சந்திரயான் உடன் தொடங்கியிருக்கிறது. ஜனநாயகத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை இந்த அவை கட்டிக்காத்துள்ளது இந்த அவையின் தாக்கத்தால் நமது வலிமையை உலகிற்கு நிரூபித்துள்ளோம். இன்று, நான் மீண்டும் நமது விஞ்ஞானிகளை வாழ்த்த விரும்புகிறேன்" என்று கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
