‘கிரிக்கெட் மைதானத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை’-கர்நாடக முதல்வர் சித்தராமையா அறிவிப்பு
ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றியைக் கொண்டாட ஜூன் 4 ஆம் தேதி சின்னசாமி ஸ்டேடியத்தின் வாயிலில் பெரும் கூட்டம் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவத்துக்கும் கர்நாடக அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். ஆர்சிபியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஜூன் 4 ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். "இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது. இது கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. கிரிக்கெட் மைதானத்துக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. 'அதிகாரிகளின் தவறால் நடந்தது' நெரிசலுக்கான பழியை அதிகாரிகள் மீது சுமத்திய சித்தராமையா, தனது தலைமையின் கீழ் மாநிலத்தில் இதுபோன்ற முதல் சம்பவம் இது என்றும், பல அதிகாரிகளை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
"இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம், அது நடந்திருக்கக்கூடாது. நான் முதல்வரான பிறகு இதுபோன்ற சம்பவம் நடக்கவில்லை. முதல் பார்வையில் இது அதிகாரிகளின் தவறால் நடந்ததாகத் தெரிகிறது, எனவே நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். நான் உட்பட அனைவரும் வேதனையில் உள்ளனர்" என்று அவர் கூறினார். தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட பெங்களூரு போலீஸ் கமிஷனர் பி தயானந்தா பலிகடா ஆக்கப்படுகிறாரா என்று கேட்டதற்கு, மேலும் ஐந்து அதிகாரிகளும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று சித்தராமையா கூறினார்.