விண்வெளியில் இருந்து பூமியின் அழகைக் காட்டும் படங்கள்: ஷேர் செய்த சர்வதேச விண்வெளி மையம்.. நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ்!
உண்மையில், இந்தப் பதிவில் காட்டப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் இந்திய நகர விளக்குகள் பிரகாசமாக ஜொலிப்பதைக் காணலாம். இது அநேகமாக நாட்டில் அதிக மக்கள் தொகை அடர்த்தியை சுட்டிக்காட்டுகிறது.

நாம் வாழும் கிரகமான பூமி எவ்வளவு அழகு இல்லையா! சர்வதேச விண்வெளி நிலையம் (ஐ.எஸ்.எஸ்) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் சில சிலிர்ப்பூட்டும் படங்களைப் பகிர்ந்துள்ளது. அது நமது பூமிப் பந்தின் அழகை மேலும் வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தின் சமூக ஊடக தளமான எக்ஸ் அக்கவுண்ட்டில் அமெரிக்கா முதல் தென்கிழக்கு ஆசியா வரை கிரகத்தின் பல்வேறு பகுதிகளைக் காட்டும் படங்களுடன் மின்னியது. அந்த புகைப்படங்களில் ஒன்று விண்வெளியில் இருந்து பார்க்கும் வகையில் இந்தியாவுடையது. நட்சத்திரங்களின் போர்வையின் கீழ் இந்தியா பிரகாசிப்பதை அழகான படம் காட்டுகிறது.
"மேலே உள்ள நட்சத்திரங்களையும், கீழே நகர விளக்குகளையும், பூமியின் அடிவானத்தை மூடியிருக்கும் வளிமண்டல பளபளப்பையும் நீங்கள் காணலாம். படம் 1) மிட்வெஸ்ட் அமெரிக்கா படம் 2) இந்தியா படம் 3) தென்கிழக்கு ஆசியா படம் 4) கனடா" என்று எக்ஸ் செய்தியில் புகைப்படங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
