தமிழ் செய்திகள்  /  Nation And-world  /  The Brutality Of Killing A Pregnant Girl And Imprisoning Her Parents In Bihar

Bihar: கர்ப்பமடைந்த சிறுமியை கொலை செய்து பெற்றோரை சிறை வைத்த கொடூரம்

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 19, 2023 01:09 PM IST

காதலன் கர்ப்பமடைந்த சிறுமியை தீ வைத்து, எரித்து கொலை செய்து உள்ளார்.

தீ விபத்து
தீ விபத்து

ட்ரெண்டிங் செய்திகள்

பீகாரின் நவாடா மாவட்டத்தில் ரஜாவ்லி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமத்தில் வசித்து வந்த 16 வயது சிறுமி, வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் தந்த சிறுமியிடம் வாலிபர் ஆசை வார்த்தை கூறி உடலுறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சிறுமி கர்ப்பிணியாகி உள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வாலிபர் சிறுமியை தவிர்க்க தொடங்கி உள்ளார். ஆனால், வாலிபரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சிறுமி தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

சிறுமியை திருமணம் செய்து கொள்ள வாலிபரும், அவரது குடும்பத்தினரும் மறுத்து உள்ளனர். ஆனால் தான், கர்ப்பிணியான இருப்பதால் திருமணம் செய்து கொள்ள திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சி உள்ளார். தொடர்ச்சியாக சிறுமி திருமணத்திற்கு நெருக்கடி கொடுத்ததில் காதலன் ஆத்திரமடைந்து உள்ளார். இதனிடையே இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில், காதலன் கர்ப்பமடைந்த சிறுமியை தீ வைத்து, எரித்து கொலை செய்து உள்ளார்.

அதன்பின்பு வாலிபரின் பெற்றோர், சிறுமியின் பெற்றோரை பிடித்து, வீட்டு சிறையில் வைத்து உள்ளனர். இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது என்று கூறி, வாலிபரிடம் இருந்து அவர்கள் தப்பிய சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்து உள்ளனர். சிறுமி படுகொலை பற்றி போலீசார் புகாரை பெற்று விசாரணை நடத்தினர். 4 பேர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த புகாரில், 16 வயது சிறுமி வாலிபருடன் காதலில் இருந்த விவரங்களை சிறுமியின் தந்தை ஒப்பு கொண்டு உள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

WhatsApp channel

டாபிக்ஸ்