ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை!
வியாழக்கிழமை விபத்துக்குள்ளான AI 171 விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர்.

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலை அடையாளம் காணும் பணி இன்னும் நடைபெற்று வருவதாக, சிவில் மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜூன் 12 ஆம் தேதி நடந்த AI 171 விமான விபத்தில் பலியான 241 பேரில் அம்மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர். லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்ற போயிங் 787 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. AI 171 விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் இரண்டு விமானிகள் உட்பட மொத்தம் 242 பேர் இருந்தனர்.
"முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடலை அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது. இன்னும் டிஎன்ஏவுடன் எங்களால் பொருந்த முடியவில்லை. அவரது உடலைக் கண்டெடுத்தவுடன் பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிப்போம்" என்று ரஜ்னிஷ் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.‘