Old Parliament: ‘நேருவை நினைவுக்கூர்ந்த பிரதமர்! நன்றி தெரிவித்த கார்கே!’ பழைய நாடாளுமன்றத்தில் நெகிழ்சி சம்பவம்!
“தேசத்தைக் கட்டியெழுப்ப, தேசம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஒன்றாக இருக்க வேண்டும்”

பழைய நாடாளுமன்ற கட்டத்தில் இருந்து புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு செல்வதற்கு முன்பாக நடைபெற்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,"இந்த அமைப்பின் வெற்றி என்பது அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் இலட்சியங்களை நிலைநிறுத்துவதில் உள்ளது. இந்த அமைப்புகள் புனிதமானவை மற்றும் வெற்றிக்கு இன்றியமையாதவை என்ற எண்ணம் நிர்வாகத்திலும் வளர்ச்சியிலும் ஒரு அடிப்படைக் கொள்கையாகும் என கார்கே கூறினார்.
நாடு முன்னேறும் போது அரசியலமைப்பு விழுமியங்கள் மற்றும் நாடாளுமன்ற மரபுகளைப் பாதுகாக்க நாம் உறுதியளிக்க வேண்டும். நமது அரசியல் கட்சிகளை மறந்து, தேசத்தைக் கட்டியெழுப்ப, தேசம், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் ஒன்றாக இருக்க வேண்டும். இதுவே நமது நோக்கமாக இருக்க வேண்டும் என்ற கார்கே, இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய டாக்டர் பிஆர் அம்பேத்கர் ஆகியோரின் பங்களிப்புகளையும் காங்கிரஸ் தலைவர் நினைவு கூர்ந்தார்.
நேற்று நடைபெற்ற மக்களவையில் தனது உரையில் நேருவை நினைவுகூர்ந்ததற்காக பிரதமர் மோடிக்கு கார்கே நன்றி தெரிவித்தார். "இந்த சென்ட்ரல் ஹால் பண்டிட் நேருவின் 'டிரிஸ்ட் வித் டெஸ்டினி' உரைக்கு சாட்சியாக இருந்தது, நேற்று, பிரதமர் தனது உரையிலும் இதை குறிப்பிட்டார். வரலாற்று சிறப்புமிக்க உரையை நீங்கள் நினைவுபடுத்தியதற்கு நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன் என்றார்.
