குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்

குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்

Marimuthu M HT Tamil Published Mar 25, 2025 03:46 PM IST
Marimuthu M HT Tamil
Published Mar 25, 2025 03:46 PM IST

லூசியோ டயஸ் என்னும் இரவு நேர காவலாளி, ஊழியர் ஒருவரின் குடிநீர் பாட்டிலில் தொடர்ச்சியாக சிறுநீர் கழித்து வந்திருக்கிறார். அவரை பாதிக்கப்பட்ட நபர் பொறிவைத்து பிடித்திருக்கிறார்.

குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்
குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்த டெக்சாஸ் நபர்..கேமரா வைத்து பிடித்த ஊழியர்.. சிறுநீர் கழித்த நபருக்கு 6 ஆண்டு ஜெயில்

அமெரிக்காவின் டெக்ஸாஸைச் சேர்ந்த முன்னாள் காவலாளியான லூசியோ கேடரினோ டயஸ், சிறுநீரை குடிநீர் பாட்டில்களில் கழித்ததை ஒப்புக்கொண்ட பின்னர் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளது.

ஒரு மருத்துவரின் அலுவலகத்தில் குற்றங்களைச் செய்ததற்காக, 2022ஆம் ஆண்டு, டயஸ் ஏற்கனவே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவித்திருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தின்போது, ஒரு பொதுவான பகுதியில், ஐந்து கேலன் நீர் விநியோகிப்பான் இருந்தது. அதில் தான் கேடரினோ டயஸ் இவ்வாறு செய்திருக்கிறார்.

எம்.ஏ என்னும் பெண் ஊழியர், ஆகஸ்ட் 30, 2022அன்று, "தண்ணீர் விநியோகிப்பாளரிலிருந்து பெற்ற தண்ணீருக்கு ஒரு வேடிக்கையான சுவை மற்றும் வாசனை இருந்தது" என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.

தண்ணீர் பாட்டிலில் சிறுநீர் கழிக்கும்போது கேமராவில் சிக்கிய காவலாளி:

இதைக் கண்டறிய நினைத்த அந்த பெண் ஊழியர், அலுவலகத்தில் பாதுகாப்பு கேமராக்கள் இல்லாததால், ஆன்லைனில் ஒரு சிறிய கேமராவை வாங்கி தனது கணினியில் இணைத்தார். கேமராவின் பார்வையில் படும்படி, ஒரு பெரிய தண்ணீர் பாட்டிலையும் வைத்தார்.

அப்போது அந்த இரவு நேர காவலாளி லூசியோ டயஸ், அந்த குடிநீர் பாட்டிலில் சிறுநீர் கழித்திருக்கிறார் என்பது உறுதியானது.

இதுதொடர்பான நீதிமன்ற ஆவணத்தில்,"இரவுநேர காவலாளி லூசியோ டயஸ், எம்.ஏ.வின் மேசையை சுத்தம் செய்வது போல் அணுகி, துப்புரவு செய்துவிட்டு, அவரது சிறுநீரை குடிநீர் பாட்டிலில் பிடித்துள்ளார்" என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேலும் அவர், "பின்னர் மூடியை மீண்டும் பாட்டிலில் மூடி வைத்தார். அடுத்து தான் எடுத்த இடத்தில் அந்தப் பாட்டிலை மீண்டும் வைத்தார். மேலும் மேசையை 'சுத்தம்' செய்வதைத் தொடர்ந்தார். லூசியோ டயஸ் இதைச் செய்யும்போது பதட்டப்படவில்லை - அவர் இதை முன்பே செய்திருந்தார் - அது இப்போது அவரது அன்றாட ஒரு சடங்கின் ஒரு பகுதியாக மாறிவிட்டது, "என்று நீதிமன்ற அறிக்கை மேலும் கூறியது.

மேலும் படிக்க:| Delimitation : ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தால் தான் தொகுதி வரையறை நடக்கும்’ கபில் சிபில்!
குற்றங்களை ஒப்புக்கொண்ட டயஸ்:

இதைத்தொடர்ந்து அந்த பெண் ஊழியரின் புகாரின்படி, போலீஸ் விசாரணையின்போது டயஸ் குற்றங்களை ஒப்புக்கொண்டார்.

பின்னர் அந்த பெண் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பல்வேறு சோதனைகளுக்குப் பின், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை நோய்த்தொற்றுக்கு ஆளானதை உறுதிப்படுத்தினார். மேலும் கிளமிடியா என்னும் பால்வினைக்கும் ஆளானார்.

மேலும் படிக்க:| நீதிபதி யஷ்வந்த் வர்மா பண மோசடி வழக்கு : அனைத்து ஆவணங்களையும் பொதுவெளியில் வெளியிட்ட உச்சநீதிமன்றம்!

இதைத் தொடர்ந்து, மருத்துவப் பணியில் ஈடுபட்டிருந்த பல பெண்கள் இதேபோன்ற பால்வினை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. டயஸுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பல சிவில் வழக்குகளை மதிப்பாய்வு செய்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 10, 2022 அன்று, டயஸால் குறிவைக்கப்பட்ட மற்றொரு பெண், இதேபோன்ற ஒரு பிரச்னையைச் சந்தித்து இருக்கிறார். அந்தப் பெண்ணுக்கும், ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 மற்றும் கிளமிடியா பாதிப்பு ஏற்பட்டதாக போலீஸாரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, தேனி மாவட்டத்தைச் சார்ந்தவர். முதுகலை கட்டுமானப்பொறியியல் துறையில் பட்டம்பெற்றவர். விகடனில் 2014-15க்கான தலைசிறந்த மாணவப் பத்திரிகையாளர் விருது பெற்றவர். 11ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு,காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகத்தில் அனுபவம் கொண்டவர். தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக பள்ளியில் படிக்கும்போதே கையெழுத்துப் பிரதியில் ஆரம்பித்த இவரது ஊடகப்பயணம், தாலுகா நிருபர், விகடன், மின்னம்பலம், காவேரி நியூஸ் டிவி, நியூஸ் ஜெ டிவி, ஈடிவி பாரத் தமிழ்நாடு வரை பயணிக்கச் செய்து, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் இவரை சேர்த்துள்ளது. அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளையும் எழுதக்கூடியவர். சினிமாவில் இயக்கம் சார்ந்த பணிகளில் ஈடுபடுவது, சிறுகதை எழுதுவது மிகப்பிடித்தமான பணிகள்!
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.