Telangana: பொருளாதாரம், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் சாதி வாரி கணக்கெடுப்பு! தெலங்கானா சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
பீகார், ஆந்திர பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக சாதி வாரி கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கான மசோதா தெலுங்கானா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சாதிவாரி கணக்கெடுப்பு மசோதா தெலங்கானா சட்டப்பேரவையில் தாக்கல்
தெலங்கானா மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் சாதிவாரபி கணக்கெடுப்பு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
கடந்த ஆண்டில் தெலங்கானாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது மாநிலத்தில் சாதி வாரிி கணக்கெடுப்பு நடத்தப்படும் என காங்கிரஸ் சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மாநிலத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த ஆளும் காங்கிரஸ் அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
அதன்படி, இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலத்தில் சமூக, பொருளாதாரம், கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்பை பெற சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.