Tech layoffs March 2024: செலவினங்கள் கட்டுப்பாடு..! வரிசை கட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டாப் நிறுவனங்கள்
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Tech Layoffs March 2024: செலவினங்கள் கட்டுப்பாடு..! வரிசை கட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டாப் நிறுவனங்கள்

Tech layoffs March 2024: செலவினங்கள் கட்டுப்பாடு..! வரிசை கட்டி ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடும் டாப் நிறுவனங்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Mar 30, 2024 04:08 PM IST

5G உபகரணங்களுக்கான தேவை குறைந்து வருவதால் எரிக்சன் நிறுவனம் 1,200 பேர் பணி நீக்கம் செய்துள்ளது. இதேபோல் டெல் நிறுவனமும் பணியாளர்களை குறைக்கும் வேலையில் இறங்கியுள்ளது.

செலவினங்களை கட்டுப்படுத்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழில்நுட்ப நிறுவனங்கள்
செலவினங்களை கட்டுப்படுத்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழில்நுட்ப நிறுவனங்கள்

எரிக்சன், டெல், ஆப்பிள் ஆகிய நிறுவனங்களில் கடந்த மார்ச் மாதத்தில் பல்வேறு காரணங்களால் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 5 ஜி உபகரணங்களுக்கான தேவை குறைந்து வருவதால் ஸ்வீடனில் உள்ள எரிக்சன் பகுதியில் 1, 200 பேர் பணீநிக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் செலவினங்களை குறைக்க டெல் நிறுவனமும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

மார்ச் 2024இல் தொழில்நுட்ப துறையில் மேற்கொள்ளப்பட்ட பணி நீக்கங்கள் விவரம் இதோ

எரிக்சன்

5 ஜி நெட்வொர்க் உபகரணங்களுக்கான தேவை குறைந்ததால் ஸ்வீடனில் சுமார் 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக எரிக்சன் அறிவித்தது.

இந்த பணிநீக்கமானது ஸ்வீடன் தொலைத் தொடர்பு நிறுவனமான 2024ஆம் ஆண்டுக்கான செலவு குறைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் நிலவும் சவாலான மொபைல் நெட்வொர்க் சந்தை குறித்த எதிர்பார்ப்புகளை மேற்கோள் காட்டியிருக்கும் எரிக்சன் நிறுவனம், கடந்த ஆண்டிலும் 8,500 ஊழியர்களை, அதாவது தங்களது பணியாளர்களில் 8% பேரை பணிநீக்கம் செய்தது.

டெல்

செலவு குறைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தனது பணியாளர்களை குறைத்துள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த பிப்ரவரி மாதம் டெல் நிறுவன ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,20,000ஆக இருந்தது. ஆனால் இது 2023இல் சுமார் 1,26,000 ஆக இருந்தது.

டெல்லின் பிசிக்களுக்கான தேவை இருக்கும் நேரத்தில் பணிநீக்கங்கள் வந்துள்ளன, இதன் விளைவாக Q4 வருவாயில் 11% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள்

எதிர்கால ஆப்பிள் வாட்ச் மாடலுக்கான மைக்ரோ எல்இடி டிஸ்ப்ளேக்களை உருவாக்குவதற்கான உள் முயற்சிகளை ஆப்பிள் நிறுத்தியதாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அதன் காட்சி பொறியியல் குழுக்களை மறுசீரமைத்தது. அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் பல்வேறு ஊழியர்களை பணிநீக்கம் செய்தது.

ஐபிஎம்

இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின்ஸ் கார்ப் (ஐபிஎம்) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் தகவல் தொடர்பு பிரிவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணிநீக்கங்களை மேற்கொண்டது. இந்த முடிவை ஐபிஎம்மின் தலைமை தகவல் தொடர்பு அதிகாரி ஜொனாதன் அடாஷேக் ஏழு நிமிட கூட்டத்தில் வெளிப்படுத்தினார் என்று பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி சிஎன்பிசி தெரிவித்துள்ளது.

டர்னிடின் 

கருத்துத் திருட்டு கண்டறிதல் நிறுவனமான டர்னிடின் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சுமார் 15 பேரை பணிநீக்கம் செய்தது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் கேரன் கடந்த ஆண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையை 18 மாதங்களுக்குள் 20% குறைக்க உதவும் என்றார். அதன்படி ஆட்குறைப்பும் நடந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.