Tamil News  /  Nation And-world  /  Tata Motors Has Launched A Cng Model In The Tiago Nrg Car
டியாகோ  NRG iCNG
டியாகோ NRG iCNG

Tiago NRG iCNG : டியாகோ NRG காரில் CNG மாடல்!

24 November 2022, 14:25 ISTSuriyakumar Jayabalan
24 November 2022, 14:25 IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோ NRG காரில் சிஎன்ஜி (CNG) மாடலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் முன்னணி மோட்டார் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் பல கார்களை விற்பனை செய்து வருகின்றன. 

ட்ரெண்டிங் செய்திகள்

இக்கார்களுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பலவிதமான மாடல்களை வெளியிட்டு வரும் டாடா நிறுவனம் தற்போது காரான டியாகோ NRG காரில் சிஎன்ஜி ( CNG) மாடலை வெளியிட்டுள்ளது.

இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையானது 7.40 லட்சம் ரூபாயில் இருந்து தொடங்கி 7.80 லட்சம் ரூபாய் வரை இந்த நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் வெளிப்புற டிசைன் SUV காரை போல உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் அம்சங்கள்

  • இதில் ஆப் ரோடிங், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ், மஸ்குலர் ஸ்டேன்ஸ் வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த காரில் 1.2 லிட்டர் 3 சிலிண்டர் revtron பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 72BHP பவர் மற்றும் 95 NM டார்க்விசை கொண்டதாகும்.
  • இதில் புதிய ரூப் ரைல்ஸ், 15 இன்ச் ஸ்டீல் வீல், பிளாஸ்டிக் பாடி க்ளாடிங், டச் ஸ்க்ரீன் இன்போடைன்மெண்ட் ஸ்க்ரீன், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் வசதி, அபோல்ஸ்ட்ரி பாப்பிரிக் சீட் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
  • அதேபோல் டூயல் ஏர் பேக், ABS, EBD, ஹர்மான் சவுண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிலே வசதி, ஆண்ட்ராய்டு ஆட்டோ, கூல்டு க்ளோவ் பாக்ஸ் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.