Tamil News  /  Nation And-world  /  Tamil Latest News Updates

இன்றைய முக்கிய செய்திகள் (27,05,2023)

Tamil Latest News Updates : சோழர் கால செங்கோல் பிரதமரிடம் ஒப்படைப்பு

17:13 ISTHT Tamil Desk
17:13 IST

இன்றைய (27.05.2023) முக்கிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்தப்பக்கத்தில் இணைந்திருங்கள்

Sat, 27 May 202316:28 IST

செங்கோல் பிரதமர் மோடியிடம் ஒப்படைப்பு

தமிழ்நாட்டில் இருந்து டெல்லி சென்ற ஆதீனங்கள், பிரதமர் மோடியை சந்தித்து செங்கோலை வழங்கினர்

Sat, 27 May 202315:10 IST

பட்டன் கேமரா பயன்படுத்தி தேர்வில் மோசடி - மாணவர் கைது

புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் சேவைகள் தேர்வில் பட்டன் கேமரா, டிரான்மீட்டர் பயன்படுத்தி தேர்வு எழுதிய தர்மர் என்ற மாணவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு உதவிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு

Sat, 27 May 202313:47 IST

பண்ணைவீட்டில் ரெய்டு நிறைவு

செந்தில் பாலாஜியின் தம்பிக்கு தொடர்புடைய கோவை பொள்ளாச்சி அருகே செம்மனாம்பதியில் அரவிந்த் என்பவர் வீட்டில் வருமானவரி சோதனை நிறைவு 

Sat, 27 May 202313:46 IST

செந்தில் பாலாஜி நண்பர் உணவகத்திற்கு சீல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான கொங்கு மெஸ் என்ற உணவகத்திற்கு வருமானவரித்துறையினர் சீல் வைத்தனர்

Sat, 27 May 202311:20 IST

கர்நாடக அமைச்சரவை பட்டியல் வெளியீடு

கர்நாடகாவில் 34 அமைச்சர்களின் இலாகா விவரம் வெளியானது. சித்தராமையாவுக்கு நிதி, அமைச்சரவை விவகாரங்கள், ஆட்சி நிர்வாகம், உளவுத்துறை, டி.கே.சிவக்குமாருக்கு நீர்பாசனம் மற்றும் பெங்களூரு நகர் வளர்ச்சி துறை, பரமேஸ்வராவுக்கு  உள்துறை, ஹெச்.கே.பாட்டீலுக்கு சட்டம், சட்டமன்ற விவகாரங்கள், சிறு நீர்பாசனங்கள் துறைகள் ஒதுக்கீடு

Sat, 27 May 202311:08 IST

கிருத்திகா உதயநிதியின் 36.3 கோடி அசையா சொத்துக்கள் முடக்கம்!

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறை வெளியிட்ட தகவலின் படி 36.3 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களையும், அவரது வங்கி கணக்கில் உள்ள 36.3 லட்சம் ரூபாயையும் முடக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 27 May 202310:57 IST

துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்

விசாரணைக்கு அழைக்கும் நபர்களை துன்புறுத்துவதை தவிர்க்க வேண்டும் என போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

Sat, 27 May 202310:55 IST

அடுத்த 3மணி நேரத்தில் மழை!

அடுத்த 3மணி நேரத்தில் திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sat, 27 May 20239:20 IST

சிறுத்தை பிடிக்கச் சென்றவர்களை திருட்டு கும்பல் என நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்திய கிராமத்தினர்!

மத்திய பிரதேச மாநிலம் புராகேட் பகுதியில் புகுந்த சிறுத்தையை பிடிக்கச் சென்ற குழுவினரை மாடு திருட வந்த கும்பல் என தவறாக நினைத்து துப்பாக்கிச்சூடு நடத்தியும் கற்களால் வீசியும் கிராம மக்கள் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் 4 வனத்துறையினர் படுகாயம் அடைந்துள்ளனர். 

Sat, 27 May 20239:17 IST

கம்பம் பகுதிகளில் 144 தடை உத்தரவு

கம்பம் நகருக்குள் அரிசி கொம்பன் யானை புகுந்துள்ளதால் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Sat, 27 May 20239:16 IST

காவல் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 7- காவலர்களுக்கு பணி நியமன ஆணை!

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த காவல் பயிற்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற 7- காவலர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

Sat, 27 May 20239:15 IST

தனி விமானம் மூலம் டெல்லி விரைந்த திருவாவடுதுறை ஆதினம்

மத்திய அரசு ஏற்பாடு செய்த தனி விமானம் மூலம் தலைநகர் டெல்லிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சென்றார்

Sat, 27 May 20239:13 IST

திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது

தேசிய நலன் கருதி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை உங்களுடன் கொண்டாட முடிவு செய்துள்ளேன். திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் ஏன் கலந்து கொள்ளக் கூடாது என்பதை நாட்டிற்கு சொல்ல வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கையில் கேள்வி எழுப்பி உள்ளார். 

Sat, 27 May 20238:54 IST

'தி கேரளா ஸ்டோரி’  திரைப்படத்தின் இயக்குநர் மருத்துவமனையில் அனுமதி!

 'தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குநர் சுதிப்டோ சென் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Sat, 27 May 20238:31 IST

2023 கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த ஒன்றிய அரசு ஒப்புதல்!

பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் நன்றி!

Sat, 27 May 20237:57 IST

புதுச்சேரியில் தமிழ் விருப்பப்பாடமாக தேர்வு செய்ய வாய்ப்பு!

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்தில் தமிழ் விருப்பப்பாடமாக தேர்வு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் 1 ஆம் வகுப்பு முதல் 10 வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பிற்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

Sat, 27 May 20237:30 IST

மீண்டும் களமிறங்கிய பப்ஜி!

பப்ஜி விளையாட்டு மே 29 முதல் மீண்டும் வரவிருப்பதாகவும், இன்று முதல் செயலியை டவுன்லோடு செய்துகொள்ளலாம் எனவும் BGMI அறிவித்துள்ளது. 

Sat, 27 May 20237:23 IST

சச்சிதானந்தத்தின் வீட்டில் 2.1 கோடி பறிமுதல்!

ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் போக்குவரத்து காண்ட்ராக்டர் சச்சிதானந்தத்தின் வீட்டில் 2.1 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. தொகையை அமைச்சரிடம் கொடுக்க வைத்திருந்ததாக ஒப்பந்ததாரர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக தகவல்

Sat, 27 May 20237:10 IST

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

 "எவ்வளவு நிதிச்சுமை இருந்தாலும், கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும்”

 -அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!

Sat, 27 May 20236:51 IST

சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம்

 சென்னை ஸ்டான்லி, திருச்சி, தருமபுரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாததால் அங்கீகாரத்தை திரும்ப பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு

சிசிடிவி, மருத்துவர்கள் கைரேகை பதிவு உடனடியாக சரி செய்யக் கூடிய பிரச்சினை- 

-மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Sat, 27 May 20236:49 IST

இயக்குநர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷ் சகோதரி

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷின் சகோதரி தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் தற்போது எடுத்திருக்கும் குறும்படத்திற்கு ‘தேங்க் யூ’ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.

Sat, 27 May 20236:34 IST

மினி கூப்பர் காரில் சோதனை 

கோவையில் தொழில் அதிபர் அரவிந்துக்கு சொந்தமான விலை உயர்ந்த மினி கூப்பர் காரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சொகுசு காரில் ஏதேனும் ஆவணங்களை மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

Sat, 27 May 20236:32 IST

திடீர் சோதனை

சேலத்தில், இறைச்சிக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் 64 கிலோ கெட்டுப்போன இறைச்சியைப் பறிமுதல் செய்து அழித்தனர்.

Sat, 27 May 20236:31 IST

சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு

கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு சிஆர்பிஎப் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Sat, 27 May 20236:30 IST

மெரினாவில் போக்குவரத்து மாற்றம்

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மாலை நேரங்களில் போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்.

Sat, 27 May 20235:39 IST

தீ விபத்து - பெண் பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வீட்டில் தீப்பெட்டிகள் தயாரித்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். தீப்பெட்டி குச்சிகள் ஒன்றோடு ஒன்றோடு ஒன்று உரசியதில் தீப்பற்றி சுகன்யா என்பவர் உயிரிழந்துள்ளார்.

Sat, 27 May 20235:38 IST

நாகை ஆட்சியர் பொறுப்பேற்பு

நாகை மாவட்ட ஆட்சியராக ஜானி டாம்வர்க்கீஸ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Sat, 27 May 20235:36 IST

கள்ளச்சாராய ரோந்து

திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலை கும்பம் மலைபகுதியில் ஆரணி டிஎஸ்பி ரவிசந்திரன் தலைமையில், ட்ரோன் கேமரா மூலம் கள்ளச்சாராய ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.

Sat, 27 May 20235:06 IST

கோவையில் 2வது நாளாக தொடரும் ஐடி ரெய்டு

கோவையில் தொழிலதிபர் அரவிந்த் வீடு உள்பட 7 இடங்களில் 2வது நாளாக ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது. அரவிந்த்க்கு சொந்தமான மறுவாழ்வு மைய அலுவலகம், கோழி பண்ணை உள்பட 4 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வருமான வரித்துறை சோதனை நடைபெறும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Sat, 27 May 20235:06 IST

யுபிஐ வசதி அறிமுகம்

தமிழகம் முழுவதும் 23 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்.

Sat, 27 May 20234:37 IST

 பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி!

திருநெல்வேலி விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்தோருக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது.

Sat, 27 May 20234:18 IST

புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் சமாளிக்கும் கட்டமைப்பு உள்ளது - மா.சுப்பிரமணியன்!

புதிய வைரஸின் தாக்கம் எதுவந்தாலும் அதனை எதிர்கொள்ள கட்டமைப்பு சரியாக உள்ளது என சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Sat, 27 May 20234:15 IST

கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர்

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை  முதல்வர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.

Sat, 27 May 20233:43 IST

நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!

கும்பகோணம் நாச்சியார்கோவில் ஆகாசமாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலம். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் பவனி வந்த அம்மன் மீது கூடை கூடையாக மல்லிகை மலர்களைத் தூவி வரவேற்ற பக்தர்கள்.

Sat, 27 May 20233:42 IST

டிகர் எஸ்வி சேகர் காவல் நிலையத்தில் புகார்!

வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் எஸ்வி சேகர் புகார். சில தினங்களுக்கு முன்பு கர்நாடகா தேர்தலில் பாஜக தலைவர்களின் பங்களிப்பு குறித்து ஊடகங்களில் பேசியதாகவும், ராமலட்சுமி முருகன் என்பவர் தொலைபேசி மூலம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகர் எஸ்வி சேகர் புகார்.

Sat, 27 May 20233:36 IST

கொடைக்கானலில் பரிசலில் சென்று அமைச்சர்கள்!

கொடைக்கானலில் பரிசலில் சென்று அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சக்கரபாணி ஆய்வு செய்தனர்.

Sat, 27 May 20233:21 IST

நேரு நினைவு தினம் - மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் மரியாதை!

நாட்டின் முதல் பிரதமர் நேருவின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Sat, 27 May 20233:03 IST

கரூரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு!

கரூரில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கையால் தாக்கியது, தகாத வார்த்தையில் திட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு. கரூர் மாவட்ட காவல்துறை தகவல்.

Sat, 27 May 20232:56 IST

ஓடும் ரயிலில் வசமாக சிக்கிய திருடன்.. செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற நிலையில் சிக்கினார்!

சீரடியில் இருந்து சென்ட்ரல் சென்ற விரைவு ரயிலில், பயணியின் கழுத்தில் இருந்த செயினை பறித்துக் கொண்டு தப்ப முயன்ற திருடனை துரிதமாக செயல்பட்டு, ஊர்க்காவல் படை வீரர் தேவராஜ் பிடித்தார்.

திருடன் கழிவறையில் ஒளிந்து கொண்ட நிலையில், அவர் வெளியே வரமுடியாதபடி கதவை கயிற்றினால் கட்டி, ரயில் நிலையம் வரும் வரை காத்திருந்து போலீசில் ஒப்படைத்தார்

Sat, 27 May 20232:44 IST

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்!

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம்; தமிழ்நாடு, டெல்லி, தெலங்கானா, மேற்கு வங்க முதலமைச்சர்கள் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 27 May 20231:58 IST

15க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

தமிழகத்தில் நேற்று புதியதாக 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 84 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Sat, 27 May 20231:56 IST

ஐபிஎல் கோப்பை யாருக்கு?

அகமதாபாத்தில் நாளை நடைபெறும் ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே குஜராத் அணிகள் மோதுகின்றன.

Sat, 27 May 20231:38 IST

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்

3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீரிருப்பு 2288 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை

1081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீரிருப்பு 715 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை

500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் நீரிருப்பு 461 மில்லியன் கன அடியாக உள்ளது; நீர்வரத்து இல்லை

Sat, 27 May 20231:35 IST

12 மாவட்டங்களில் கனமழை 

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Sat, 27 May 20231:24 IST

கரூர் துணைமேயர் வீட்டுக்கு சீல் 

அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் வீடு, அலுவலகங்களில் இரவிலும் வருமான வரி சோதனை நடைபெற்றது. கரூர் மாநகராட்சி துணை மேயர் வீட்டிற்கு அதிகாரிகள் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Sat, 27 May 20231:21 IST

மழையும், வெயிலும் 

தமிழ்கத்தில் சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, வேலூர் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் சதமடித்தது வெயில். அனல் காற்றும் வீசியதால் மக்கள் அவதியடைந்தனர்.

Sat, 27 May 20231:12 IST

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் 

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தினேஷ் குண்டுராவ், ஹெச்.கே.பாட்டீல் உள்ளிட்ட 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கிறார்கள்.

Sat, 27 May 20231:07 IST

இன்றும் மாறாத பெட்ரோல் - டீசல் விலை

பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்து இன்றுடன் 371 நாள்கள் ஆகிறது. சென்னையில் இன்று (மே 27) பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து 371வது நாளாக அதே விலையில் பெட்ரோல், டீசல் விலை விற்கப்படுகிறது.

சென்னையில் இன்று (மே 27) ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.102.63க்கும், டீசல் விலை லிட்டருக்கும் ரூ.94.24க்கும் விற்பனையாகிறது.

Sat, 27 May 20230:33 IST

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண்

எவரெஸ்ட் உச்சியைத் தொட்டு திரும்பியுள்ள முதல் சாதனைப் பெண் முத்தமிழ்ச்செல்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதனால் எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் என்ற பெருமையை முத்தமிழ்ச்செல்வி பெறுகிறார்.

பகிர்வு கட்டுரை