Tamil News  /  Nation And-world  /  Swedish Woman's Hair Freezes As She Steps Out At -30 Degrees Celsius Temperature

Sweden Cold: அடே முள்ளம்பன்றி தலையா”! உறைய வைக்கும் கடும் குளிர் - கவுண்டமணி மோடுக்கு மாறிய ஸ்வீடன் மக்கள்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 12, 2024 06:00 PM IST

சோசியல் மீடியா இன்ப்ளூயன்சர் பகிர்ந்த விடியோவில் ஸ்வீடன் நாட்டில் நிலவும் கடுமையான குளிர் பார்ப்பவர்களை நடுங்க வைக்கும் விதமாக உள்ளது. அந்த நபரின் தலைமுடி -30 டிகிரி குளிரில் குச்சி போல் விரைப்புடன் நின்றுள்ளது.

கடும் குளிரால் குச்சி போல் நின்ற தலைமுடி
கடும் குளிரால் குச்சி போல் நின்ற தலைமுடி (Instagram/@Elvira Lundgren)

ட்ரெண்டிங் செய்திகள்

எல்விரா லண்ட்கிரென் என்ற அந்த நபர், -30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவரது தலைமுடியை அப்படியே உறைந்து போய் குச்சி போல் விரைப்பாக நின்றுள்ளது. இதை விடியோவாக எடுத்து அவர், வானிலை எவ்வளவு சாதகமில்லாமல் இருக்கிறது என்பது வெளிப்படுத்தவே இந்த விடியோ எடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த விடியோவுக்கான பதிவில், "வெப்பநிலை -30 டிகிரியை எட்டியுள்ளது. இந்த சூழ்நிலையில் சிறிய பரிசோதனை முயற்சி மேற்கொண்டுள்ளேன்" என்று பதிவிட்டுள்ளார். ஸ்வீடன் நாட்டில் -43.6 டிகிரி செல்சியஸ் இதுவரை பதிவான வெப்பநிலையில் மிக குறைவானதாக உள்ளது.

விடியோவில் எல்விரா உறையவைக்கும் வெப்பநிலையில் தலைக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் நின்ற கொண்டு, பின்னர் குனிந்து தனது தலைமுடியையும் கீழ் நோக்கி இருக்குமாறு செய்கிறார். அப்போது உடனடியாக அவரது தலைமுடி உறைந்து போனதை காண முடிகிறது. அவர் தற்போது வடக்கு ஸ்வீடன் பகுதியில் இருந்து வருவதை விடியோவில் இடம்பெற்றிருக்கும் எழுத்துகளின் மூலம் அறிய முடிகிறது.

பொதுவாக டிசம்பர் முதல் பிப்ரவரி காலம் வரை வடதுருவ பகுதிகளில் கடுமையான வெப்பநிலைய நிலவுவது இயல்புதான். ஆனால் சமீப காலமாக வழக்கத்தை விட அதிகமாக குளிர் நிலவி வரும் நிலையில், அதை கண்டென்டாக வைத்து இதுபோன்ற இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்களும் விடியோக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்கள்.

இந்த விடியோ பதிவு கடந்த சில நாள்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது, மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.  

விடியோவை பார்ப்பவர்கள் பலரும் ஆச்சர்யம், மிரட்சியை வெளிப்படுத்தும் விதமாக கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். அத்துடன் சிலர் இது போன்ற செயல்களை செய்வதன் மூலம் உடல் நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் சிலர் அக்கறை பதிவுகளையும் பகிர்ந்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் பல படங்களில் காமெடியனான கவுண்டமணி, செந்திலை முள்ளம்பன்றி தலையா, கீரிப்புள்ள தலையா என கிண்டல் செய்வதுண்டு. அந்த வகையில் ஸ்வீடன் மக்கள் நிலைமை தற்போதையே நிலையில் கவுண்டமணி மோடில் தான் இருக்கும் என தெரிகிறது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

WhatsApp channel